1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் அனுமதி கோரியுள்ளார்.

அதன்படி கம்மன்பில இது தொடர்பான கடிதத்தை செயலாளர் நாயகத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் போது வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலரிமாளிகையில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

கடந்த வாரம் டொலர் தட்டுப்பாடு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கடுமையான கருத்தை வெளியிட்டதுடன், இந்த நிலை குறித்து அரசாங்கம் மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு காரணம் கொரோனா வைரஸ் பரவல் என கூறப்படும் கூற்றுக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இந்த நாட்டில் டொலர் பிரச்சினைக்கு காரணம் அதிகரித்து வரும் கடன்தான் காரணம் என்றும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தப்பட்ட பிறகும் டொலர் நெருக்கடி தீர்க்கப்படாது என்றும் அவர் கூறினார்.

அதன்படி நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜயந்த கெட்டகொட இந்த விடயத்தை முதலில் எழுப்பினார்.

இந்த கருத்தை தெளிவுபடுத்துமாறு கெட்டகொட விடுத்த கோரிக்கை தொடர்பில் திரு.கம்மன்பில கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ள நிலையில், பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டனர்.

கம்மன்பிலவின் கருத்துக்களையும் நிராகரித்த ஜனாதிபதி, டொலர் தட்டுப்பாட்டுக்கான காரணங்களை விரிவாக விளக்க நடவடிக்கை எடுத்தார்.

ஜனாதிபதிக்கு பின்னர் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவும் கம்மன்பிலவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் என்ற ரீதியில் பொறுப்புடன் பேசுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி