1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டில் எதிர்வரும் மாதங்களில் மருந்து தட்டுப்பாடு தீவிரமடையும் என எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றவை.

ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். எதிர்வரும் நாட்களில் அந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.

கொவிட்-19 தடுப்பூசிக்காக இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 327.157 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது. கொவிட் தடுப்பூசி குறித்து எதிர்தரப்பினருக்கு விளக்கமிக்கவும், பகிரங்க விவாதத்தில் கலந்துக் கொள்ளவும் தயாராகவுள்ளேன் என மருந்து உற்பத்தி மற்றும் விநியோக ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8 ) இடம்பெற்ற சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகார சபை சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது

டொலர் பற்றாக்குறை காரணமாக நாட்டில் எதிர்வரும் 3மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்பாடு தீவிரமடையும் என முன்னாள் சுகாதார அமைச்சர் முன்வைத்துள்ள கருத்து அடிப்படையற்றது.டொலர் நெருக்கடி காரணமாக மருந்து இறக்குமதியில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம் அதனை மருந்துக்கான தட்டுப்பாடு என கருத முடியாது.

என்டிஜன் பரிசோதனை கருவிகளுக்கு கடந்த நாட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். கடந்த காலத்தை காட்டிலும் தற்போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கொவிட் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் நாட்களில் சுமார் 4 இலட்சம் என்டிஜன் பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்வோம்.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் தரவு கோப்பு அழிக்கப்பட்டமை குறித்து எதிர்தரப்பினர் குறிப்பிட்டார்கள்.அழிக்கப்பட்ட தரவுகள் தற்போது மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள தரவுகளை பாதுகாப்பான முறையில் நிறுவுவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தரவுகள் அழிக்கப்பட்டதால் மருந்துகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.பதிவு செய்தல்,பதிவுகளை புதுப்பித்தல் குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இணைத்தரவுகள் காணப்படுகிறது.தரவு கோப்பு அழிப்பு குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் முறையான விசாரணையினை முன்னெடுத்து வருகிறார்கள் இச்சம்பவத்தின் பின்னணி விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்.

கொவிட் -19 தடுப்பூசி கொள்முதல் குறித்து எதிர்தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை இதுவரை காலமும் முன்வைத்து வந்துள்ளார்கள்.தடுப்பூசிகளை கொள்வனவு செய்த நிறுவனங்களுடன் செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய தடுப்பூசி தொடர்பிலான விலையினை குறிப்பிட முடியாத நிலைமை காணப்பட்டது..இருப்பினும் தற்போது உண்மை தன்மையினை பொது மக்களுக்கும்,எதிர்தரப்பினருக்கும் குறிப்பிட வேண்டிய தேவை காணப்படுகிறது.

அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி சுமார் 27 இலட்சமளவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது,இதில் 5 இலட்சம் தடுப்பூசிகள் நிவாரண அடிப்படையில் நன்கொடையாக கிடைக்கப் பெற்றன.மிகுதி தடுப்பூசிகள் 5.25 அமெரிக்க டொலர் என்ற விலையின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டது.

இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 26 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.3 மில்லியன் தடுப்பூசிகளை சினோபார்ம் நிறுவனம் நிவாரண நன்கொடை அடிப்படையில் வழங்கியது.மிகுதி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டன.ஒரு சினோபார்ம் தடுப்பூசியை 15 மில்லியன் டொலருக்கு வழங்க சினோபார்ம் நிறுவனம் ஆரம்பத்தில் இணக்கம் தெரிவித்தது.

கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் தீர்மானம் அரசியல் மட்டத்தில் முன்னெடுக்கப்படவில்லை துறைசார் நிபுணர்களின் குழுவினரால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டன.சினோபார்ம் தடுப்பூசியின் விலை குறித்து அவதானம் செலுத்துமாறு நிபுணர் குழுவினர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்கள்.

கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார நிலைமை,நாட்டு மக்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தலின் அவசியம் ஆகிய காரணிகளை விளக்கி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் சினோபார்ம் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார்.ஒரு சினோபார்ம் தடுப்பூசியின் விலையை 15 டொலருக்கு வழங்கும் தீர்மானத்தை பரிசீலனை செய்யுமாறு ஜானதிபதி குறித்த நிறுவனத்திடம் வலியுறுத்தினார்.

ஜனாதிபதியின் கோரிக்கையை கருத்திற் கொண்டு சினோபார்ம் நிறுவனம் 7 டொலர் அடிப்படையில் இலங்கைக்கு தடுப்பூசியை வழங்க இணக்கம் தெரிவித்தது.அப்போதைய காலகக்ட்டத்தில் சினோபார்ம் நிறுவனம் ஆஜன்டினாவிற்கு 20 டொலருக்கும் ஏனைய நாடுகளுக்கு 15 டொலருக்கும் அதிகமான விலையில் தடுப்பூசியை விநியோகித்தது.இலங்கைக்கு 7 டொலருக்கு விநியோகிக்கும் போது கொடுக்கல் வாங்கல் கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படும் ஆகையால் தடுப்பூசி விலையை பகிரங்கப்படுத்த வேண்டாம் என நிபந்தனை விதிக்கப்பட்டது.தடுப்பூசி கொள்வனவு விவகாரத்தில் எதிர்தரப்பினரது போலியான குற்றச்சாட்டுக்கள் எல்லை கடந்துள்ளதால் உண்மையை குறிப்பிட்டுள்ளோம்.

கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் செயற்திட்டம் வெற்றிப் பெற்றுள்ளது.மூன்றாம் கட்டத்தடுப்பூசி செலுத்தல் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகிறது.தடுப்பூசி கொள்வனவிற்காக இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 327 .157 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.தடுப்பூசி கொள்முதல் தொடர்பில் எதிர்தரப்பினருக்கு விளக்கமளிக்கவும்,பகிரங்க விவாதத்தில்கலந்துக் கொள்ளவும் தயாராகவுளளேன்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி