1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தனது 2022 ஆம் ஆண்டுக்கான வீதி வரைபடத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முற்றாக நீக்குமாறு கோரியுள்ளது.

இம்மாத முற்பகுதியில் இடம்பெற்ற இராஜதந்திரிகளுக்கான மாநாட்டின் போதே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கான புதிய வரையறையுடன் பயங்கரவாதக் குற்றமும் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஆணைக்குழு நம்புவதாக தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்தை நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழ் தேவையான திருத்தங்களுடன் விசாரிக்க வேண்டும் என்று ஆணைக்குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் சிறுபான்மையினரை இலக்கு வைத்து  முன்னெடுக்கப்பட்டுவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான கைதுகள் சர்வதேசத்தில் இலங்கைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக் காரணமாகியுள்ளது.

சர்வதேச சமூகமும் நாட்டின் சிவில் சமூக  அமைப்புகளும் தொடர்ச்சியாக இந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அரசு பெரும் நெருக்கடிக்கு மத்தியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை, கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக  இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை, கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக  இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதில் அனைரையும் இணைந்து கொள்ளுமாறு சர்வஜன நீதி அமைப்பின் ஊடாக அதன் இணைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஹக்கீம், மனோ கணேசன், இரா.சாணக்கியன்  மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்டவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.அத்துடன்,  மதத்தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட, பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்கான கையெழுத்துப் போராட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டதோடு கிழக்கு மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
11
​
12
https://bit.ly/3uHGkH6

13

 

14

15 16

17

18 19

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி