1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 


வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டல்களை இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.


புதிய வழிகாட்டல்களின் படி, புறப்படுவதற்கு 72 மணித்தியாலங்களில் பெற்றுக்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அல்லது 48 மணித்தியாலங்களில் பெற்றுக்கொண்ட ரெட்டிஜன் பரிசோதனைகள் மற்றும் கொவிட் காப்புறுதி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஆவணங்களைப் பயணிகள் வைத்திருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் இலங்கையர்களுக்கு கொவிட் காப்புறுதி அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு இரட்டை குடியுரிமை உள்ளவர்களுக்கு இலங்கையர்களுக்கான விதிமுறைகள் பொருந்தும் என அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.


இலங்கை வரும் பயணிகள் தமது சுகாதார விபரங்களை ஒன்லைனில் சமர்ப்பிப்பது கட்டாயமில்லாத போதிலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடைந்த உடன் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 Image

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.


https://bit.ly/3uHGkH

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி