1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கச்சத்தீவில் வருடாந்தம் நடத்தப்படும் புனித அந்தோனியார் பெருவிழாவில் கலந்து கொள்ள இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் எவருக்கும் இம்முறை அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய கத்தோலிக்க மதகுருமார்களின் பங்கேற்புடன் மட்டுமே திருவிழா நடத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 1974 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்கா மற்றும் இந்திரா காந்தி இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி இலங்கையால் கையகப்படுத்தப்பட்ட கச்சத்தீவு, இரு நாட்டு மீனவர்களுக்கும் கடல் தொழிலில் ஈடுபடுவதற்கான இடமாக உள்ளது.

இராமேஸ்வரத்தில் இருந்து 14 கி.மீ தொலைவில் இந்தியப் பெருங்கடலில், இலங்கைக்கு மிக அருகில் கச்சத்தீவு உள்ளது. 285 ஏக்கர் பரப்பளவுள்ள கச்சத்தீவு பகுதியில் 1900ஆம் ஆண்டு கட்டப்பட்ட புனித அந்தோணியார் தேவாலயம் இரு நாட்டு மீனவ மக்களாலும் பல தசாப்தங்களாக வழிபடப்பட்டுவருகின்றது.

மார்ச் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சத்தீவு வருடாந்த திருவிழாவில் கொவிட் தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என யாழ்.மாவட்ட செயலாளர் தெரிவித்திருந்தார். இது குறித்து கவலை தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மேனனை அழைத்து, இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த கோரினார்.

தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, திமுக தலைவர் டி.ஆர். பாலுவுக்கும் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் இடம்பெற்ற ‘ஜூம்’ கலந்துரையாடலின் போது, ​​கச்சத்தீவு திருவிழாவில் இந்திய மீனவர்கள் மற்றும் ஏனைய பக்தர்களை பங்குபற்றுமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, ஜனாதிபதியிடம் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர் தேவானந்தா, இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவில் தமிழக மீனவர்கள் மற்றும் வடபகுதி மீனவர்கள் சந்தித்து போசுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

எனினும் தற்போது ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய கத்தோலிக்க குருமார்கள் மட்டும் இம்முறை கச்சத்தீவு திருவிழாவில் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் சந்தித்தித்து பேசும் வாய்ப்பு இல்லாது போயுள்ளது.

முன்னதாக கச்சத்தீவு திருவிழாவில் பங்குபற்ற இலங்கையில் 500 பக்தர்களுக்கு அனுமதி வழங்க யாழ்.மாவட்ட செயலாளர் திட்டமிட்டிருந்தது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.


https://bit.ly/3uHGkH

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி