1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 16 பில்லியன் பாரிய நிதிமோசடி? - மறுக்கும் ஆழும் தரப்பு!மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கலகெதர முதல் பொத்துஹெர வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளில் எவ்வித ஊழல்களும் இடம்பெறவில்லை என்பதுடன், நிர்மாணப் பணிகளுக்கான டெண்டர் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று (21) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு 16 பில்லியனுக்கும் அதிகமான பாரிய நிதிக் கொள்ளை நடைபெறுவதாக 'ஊழலுக்கு எதிரான குரல்' அமைப்பு முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்துவதற்காக நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அந்த அமைப்பின் இணைப்பாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்   வசந்த சமரசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள நிலையியே அவர் இதனை கூறியுள்ளார்.அங்கு மேலும் பேசிய அவர், எவ்வாறாயினும், இந்த வீதிகள் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்த பணிகள் இன்னும் இடம்பெற்று வருகின்றன.

இன்னும் டெண்டர் விடப்படவில்லை. அவர்கள் கூறுவது போன்று கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணித்த எம்.சி.சி.  நிறுவனம் இதுவரை எந்த ஒரு டெண்டரையும் சமர்ப்பிக்கவில்லை.யாரிடமாவது பணம் வாங்கிக்கொண்டு இவ்வான பொய்யான செய்திகளை பரப்புகின்றார்கள். எனவே, ஊழல் நடைபெறவில்லை என்று கூறுகிறோம்.

பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல் தயவு செய்து உண்மையைக் கண்டறிந்து பேசுங்கள் என்கிறோம். நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் வீதி அபிவிருத்தி என்ற பெயரில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் ‘ஊழலுக்கு எதிரான குரல்’ அமைப்பின் வசந்த சமரவீர மௌனத்தை கடைப்பிடிப்பதார்.

ஏன் அப்போது அவற்றுக்கு எதிராக நீதிமன்றம் செல்லவில்லைஎனவும் அவர் கேள்வி எழுப்பினார்.எனினும் நல்லாட்சி அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கூறி பதவிக்கு வந்த கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி