1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 


கொரோனாவின் பின்னர் மீண்டுவரும் உலக நாடுகளின் புதிய கவலையாக உக்ரைன் -ரஷ்யா மோதல்கள் உள்ளன.
தனித்து போராடிவரும் உக்ரைன், உலகின் பலம் மிக்க இராணுவங்கள் வேடிக்கை பார்க்க தாம் தனித்து போராடிவருவதாக சாடியுள்ளார்.
இந்நிலையில் உக்ரைன் ஆக்கிரமிப்பை தடுத்தால் அணு ஆயுதத்தை ரஷ்யா கையில் எடுக்கும் என்கிற வகையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் மறைமுகமாக மிரட்டியுள்ளார்.


“உக்ரைன் ஆக்கிரமிப்பை தடுக்கம் விதத்தில் எந்தவொரு நாடும் நேரடியாக நம் நாட்டைத் தாக்கினால் தோல்வியையும், பயங்கரமான விளைவுகளையும் (அணு ஆயுத தாக்குதல்) சந்திக்க நேரிடும்”. என புடின் கூறி உள்ளார்.
இராணுவ விவகாரங்களை பொறுத்தமட்டில், சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னரும், அதன் திறன்களில் கணிசமான பகுதிகளை இழந்தபிறகும், இன்றைய ரஷ்யா மிகவும் பலம்வாய்ந்த அணுசக்தி நாடுகளில் ஒன்றாக உள்ளது.


ராஷ்யாவின் இந்த இராணுவ பலம் உலக நாடுகளை பீதியடைய செய்துள்ளது என்பது நிதர்சனம்.
இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் இன்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.


நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.


இதில்,உக்ரைன் மீதான மாஸ்கோவின் படையெடுப்பைக் கண்டிக்கும் தீர்மானத்திற்கு 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. எனினும் ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது.


இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதன்படி பாதுகாப்புச் சபையின் தீர்மானங்கள் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றிருந்தாலும் வீட்டோ அதிகாரம் பெற்ற 5 நாடுகளின் எவரேனும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தால் அந்தத் தீர்மானம் தோல்வியடையும் என்று ஐ நா சட்ட பிரிவு 27 ல் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.


193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் இப்போது வரைவுத் தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் தற்பொழுது ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் , ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் வீட்டோ அதிகாரம் (United Nations Security Council veto power) எனப்படும் சிறப்பு அதிகாரத்தை கொண்டுள்ளன.


இதனிடையே, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவை தண்டிக்கும் நோக்கில் புதிய பொருளாதார தடைகளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.


ஏற்கனவே இரு நிதி நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடையை இந்த வாரத்தொடக்கத்தில் விதித்த நிலையில் ரஷ்யாவின் 4 பெரிய வங்கிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கிறோம். அமெரிக்காவில் உள்ள அவர்களின் ஒவ்வொரு சொத்தும் முடக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான போரில், ரஷியா இன்று 3 ஆவது நாளாக அதிகாலை முதல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றது.


அங்கு ரஷ்ய படைகள் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்யாவின் குண்டு மழைக்கு பயந்து உக்ரைன் மக்கள் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.


இந்நிலையில், போர் நிறுத்தம் மற்றும் அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “போர் நிறுத்தம், அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாரக உள்ளது. பேச்சுவார்த்தையை எங்கு, எப்போது நடத்துவது என்பது குறித்து உக்ரைன் மற்றும் ரஷியா ஆலோசித்துவ் வருகிறது’ என்றார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி