1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 



உலகின் பலமிக்க இராணுவ படைகளில் ஒன்றான ரஷ்ய படைகள் உக்ரைனை ஆக்ரோ‌ஷமாக தாக்கி வரும் நிலையில் தம்மை போருக்கு தூண்டி நாடுகள் மௌனம் காப்பதையிட்டு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேதனை வெளியிட்டிருந்தார்.


இதுகுறித்து “தங்களுக்கு எந்த நாடும் உதவவில்லை. தாக்குதலை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றன” என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்தார்.


உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படை எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் உக்ரைனை ஆக்ரோ‌ஷமாக தாக்கி வரும் ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்காவும், நேட்டோவும் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை.


இந்நிலையில் தற்போது உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை வழங்குவோம் என்று நேட்டோ படை தெரிவித்து உள்ளது.
இது குறித்து நேட்டோ படையின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோன் பெர்க் கூறியதாவது,


“உக்ரைன் அரசை கவிழ்க்க ரஷ்யா முயற்சித்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உள்ள சில நாடுகள் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.

நிலம், வான்வெளி, கடல் மற்றும் சிறப்பு நடவடிக்கை படைகளை நேட்டோ பிராந்தியத்தில் நிலை நிறுத்தி வருகிறோம். உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அதிக அளவில் வழங்க முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.


இதற்கிடையே பிரான்ஸ் தனது 500 படை வீரர்களை ருமேனியாவுக்கு அனுப்பியுள்ளது. நேட்டோ படைக்கு வலுச் சேர்ப்பதற்காக 500 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்து உள்ளது.


அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் ரஷ்யா போரை தொடுத்து வருகிறது.


உக்ரைனுக்கு உதவினால் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் என புடின் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அணு ஆயுத பலத்தை தன்வசம் கொண்ட ரஷ்யாவுடன் மோதுவதை உலக நாடுகள் விரும்பவில்லை என்றாலும் உக்ரைனின் தற்போதைய நிலையை கண்டுக்கொள்ளமால் இருப்பதும் செய்யமுடியாத ஒன்று.


இவ்வாறு ஐரோப்பா கண்டத்தில் ஆரம்பித்துள்ள இந்த போர் சூழல் தொடருமானால் அது 3 ஆம் உலகபோராக தோற்றம் கொள்ளும் அபாயம் அதிகமாகும். இதனை தடுக்கவே ஐ.நா கடுமையான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி