1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

2022 ஆம் ஆண்டு சீனாவின் பீஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால பராலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா நாளை (04) நடைபெறவுள்ளது.


அதன் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், 'பராலிம்பிக் போட்டியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என சர்வதேச பராலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

மற்ற உறுப்பு நாடுகளின் எதிர்ப்பால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச பாராலிம்பிக் குழுத் தலைவர் என்ரு பார்சன்ஸ் தெரிவித்தார்.

மேலும் உக்ரையின் மீது ரஷ்யா மேற்கொண்டுவரும் செயற்பாடுகளுக்கு சர்வதேச ஒலிம்பிக்குழு (IOC), சர்வதேச டென்னிஸ் சம்மேளனம்(ITA), கால்பந்தாட்ட சம்மேளனங்களின் கூட்டமைப்பு (FIFA) மற்றும் ஐரேப்பிய கால்பந்தாட்ட சம்மேளனங்களின் ஒன்றியம் (UEFA) என்பன எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

மேலும் இப் போர் காரணமாக ரஷ்யாவில் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகளையும் சர்வதேச போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் இணைத்துக்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் சகல நாடுகளிலும் உள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதேச ஒலிம்பிக்குழு மற்றும் சர்வதேச டென்னிஸ் அமைப்புகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து எதிர்க்காத்தில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுடன் போட்டியிடாமல் இருப்பதற்கு உக்ரைன் டென்னிஸ் நட்சத்திரம் எலினா ஸ்விடோலினா முடிவு செய்துள்ளார்.

மேலும் போர் குறித்த எலினாவின் கருத்துக்கு மதிப்பளித்து, ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரமான அண்ட்ரே ரூப்லெவ் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு ரஷ்யாவை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் ரஷ்யாவில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளை நடத்துவதற்கும் ரஷ்யாவின் தேசியகொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு பீபா (FIFA) மற்றும் ஐரேப்பிய கால்பந்தாட்ட சம்மேளனங்களின் ஒன்றியம் (UEFA) தடை விதித்துள்ளன.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி