1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு உதவும் வகையில் 12-13 எரிபொருள் கார்கோக்களை இலங்கைக்கு வழங்கும் என இந்திய எண்ணெய் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

அடுத்த 4-5 மாதங்களுக்கு இலங்கைக்கு எரிவாயுஎண்ணெய், பெட்ரோல் மற்றும் ஜெட் எரிபொருள் ஆகியவற்றை வழங்குவதாக (IOC) தெரிவித்துள்ளது.

"எரிபொருள் வாங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 500 மில்லியன் டாலர் கடன் வரியின் கீழ் இந்த பொருட்கள் வழங்கப்படும்" என்று இந்திய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு இந்தியா ஜனவரி நடுப்பகுதியில் இணக்கம் தெரிவித்திருந்தது.

இருதரப்பு பொருளாதார கூட்டு நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த கடன் வழங்க இந்திய முன்வந்தது.

2021 டிசம்பரில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரதிபலனாக இந்த கடன் ஒப்பந்தம் வழங்கப்படிருந்திருந்து.

அண்மையில் இந்தியா இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான அந்நியச் செலாவணி ஆதரவை வழங்கியிருந்தமையை குறிப்பிடத்தக்கது.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி