1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ரஷ்யா இல்லாத உலகத்தை புட்டின் மீதம் வைப்பாரா

என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பதிலை வழங்குகின்றார்கள். சிலர் நியாயமானது என்று குறிப்பிடுகின்ற சந்தர்ப்பத்தில் சிலர் அதனை நியாயமற்றது என்றும் குறிப்பிடுகின்றனர். இன்னும் சிலர் உரிய பதிலை வழங்குவதற்கு முடியாமல் இருக்கின்றனர். இன்று ரட்டே ரால சொல்வது இது சாதாரணமானதோ அசாதாரணமானதோ என சொல்வதற்கு அல்ல .இது தொடர்பில் ஒரு தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க முடியாமல் இருக்க கூடியவர்களுக்கு உதவி செய்வதற்கு ஆகும்.

மேற்கத்தேய ஊடகங்களின் அடிப்படையில் புட்டின் தற்போது இரத்தம் பாய வைக்கின்ற ஒரு பைத்தியக்காரன். அவர்களுடைய கருத்துப்படி ரஷ்ய இராணுவத்தை போல மிலேச்சத்தனமான இராணுவம் உலகத்திலேயே இல்லை என்று. இருப்பினும் மேற்கத்தேயம் ஒன்றை மறைப்பதற்கு முயலுகின்ற உண்மையான ஒரு விடயம் உள்ளே இருக்கின்றது. அது நீண்ட வரலாறு உடைய ஒரு கதையாகும். இருப்பினும் அதனை கூடியளயளவு சுருக்கமாக சொல்லுவதற்கு ரட்டே ரால முயற்சிக்கின்றார். இன்று இருக்கக்கூடிய ரஷ்யா 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 க்கு முன்னர் இருந்தது ஒரு சமத்துவ சோவியத் ரஷ்ய கூட்டு ஆட்சி என்ற அடிப்படையிலே இருந்தது. சோவியத் குடியரசு ஆரம்பிக்கப்படுவது 1917இல். அதன் முதல் தலைவர் வீ.அய். லெனின். அன்று தொடக்கம் 1991 டிசம்பர் 25 வரை சோவியத் தேசம் விழும்வரை பல அரச தலைவர்கள் அந்த நாட்டை ஆட்சி செய்திருக்கிறார்கள். சமத்துவ அடிப்படையில் உருவாக்கப்பட்டு ஒருங்கிணைந்த கூட்டாட்சி கட்டமைப்பொன்றே சோவியத் தேசத்தில் உருவாகியது. லெனின், ஸ்டாலின் ,கொசொவ் போன்ற வலுவான தலைவர்கள் சோவியத் தேசத்தை ஆட்சி செய்தார்கள்.

சோவியத் தேசத்தின் இறுதி ஜனாதிபதியாக இருந்தவர் மிசைல் கொபர்சோப். சோவியத் தேசம் வீழ்ச்சி அடைய ஏதுவாக அமைந்தது கொர்பஸோப்பின் பிரஸ்தொரய்க் மற்றும் கிளாஸ்னோஷ் மறுசீரமைப்பே. இருப்பினும் கொபர்ஸோப் என்பவர் மேற்கத்திய சூழ்ச்சியாளரன்று. கொபர்சோப்பின் மறுசீரமைப்பின் கீழ் மேற்கத்தேய சூழ்ச்சி காணப்பட்டது. உண்மையில் சோவியத் தேசம் என்பது இந்த உலகத்திலே ஒடுக்கப்பட்டவர்களுடைய இதயமாக இருந்தது என்றால் அது தவறு இல்லை. எமது நாட்டில் இடதுசாரி தலைவர்கள் போன்று வலதுசாரி தலைவர்கள் என பல இலட்சக்கணக்கான மக்கள் இரண்டாவது நாடாக ஏற்றுக் கொண்டது சோவியத் தேசத்தையே. உண்மையில் அந்த அறிமுகம் சரியே. உலகத்திலேயே சமத்துவம் மற்றும் முதலாளித்துவம் என்ற கட்டமைப்புக்குள் இரண்டை பிரித்தது சோவியத் தேசமே. அது அமெரிக்கா தலைமையிலான மேற்கைத்தேய நாடுகள் உலக நாடுகளை தமக்கு கீழ் வைத்து சுரண்டும் அந்த ஒரு யுகத்திலே. அன்று உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருந்த ஒரு பலமாக காணப்பட்டது சோவியத் தேசமே ஆகும்.
மேற்கத்தேய அடிமைமுறை நிர்வாகத்தை போன்று. வேகமாக எழுச்சி பெற்று வந்த முதலாளித்துவ அரச கட்டமைப்பானது ஒரு சந்தர்ப்பத்தில் உலகத்தினுடைய மூன்றில் இரண்டு பகுதியை விட காலணித்துவத்திற்கு உட்படுத்தியது. நாங்களும் பிரித்தானிய காலணித்துவத்திற்கு உட்பட்ட காலப் பகுதி. அன்று காலணித்துவத்திற்கு உட்பட்ட நாடுகளுக்கு விடுதலை தகவலை வழங்கியது சோவியத் தேசமே. உண்மையில் சோவியத் தேசத்தின் மனிதர்களைப் போன்ற உலகத்தில் நல்ல மனிதர்கள் இந்த உலகத்தில் இதுவரை யாரும் கிடையாது. 1917- 1924 ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் இருந்தது முதலாவது உலக மகா யுத்தம். 1947இல் நிறைவுற்ற இரண்டாம் உலக மகா யுத்தத்தத்தை எமக்கு திருப்பியதும் சோவியத் தேசமே. அன்று சோவியத் தேசம் இல்லை என்றால் சில சந்தர்ப்பங்களில் இன்றைய உலகம் நாசி ஹிட்லருடைய பதிலாட்களின் கைகளிலே சென்றிருக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும். அவ்வாறாயின் அமெரிக்கா ஹிட்லருடன் ஒப்பந்தங்களைச் செய்து உலகத்தை நிர்வாகம் செய்யக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும். மேற்கத்தைய அரச நிர்வாகத்துடன் தோளோடு தோள் மோதி உலகத்திலேயே ஒடுக்கப்பட்ட நாடுகளுக்காக முன்னோக்கி வருவதற்கு காரணமாக அமைந்தது சோவியத் தேசமே ஆகும்.

அமெரிக்காவின் யுத்த மேலாண்மை வெறியை காலடிக்கு விழ செய்தது சோவியத் நாட்டவர்களே. உண்மையில் சோவியத் தேசம் இல்லை என்றால் இன்று உலகத்தினுடைய வரைபடத்தில் அதிகமான நாடுகள் இருந்திருக்காது. ஈரான் ,சிரியா ,கியூபா அவற்றுள் மிக முக்கியமானது. உலகத்தில் தோன்றிய பெரும் தலைவர்களும உருவாகி இருக்கமாட்டார்கள். அன்று அமெரிக்கா கியூபாவை ஆக்கிரமித்த பொழுது கியூபாவின் பாதுகாப்புக்காக கியூபாவின் தீவுகளில் இரசாயன தன்மை கொண்ட ஸ்கட் மிசைலை பொருத்தியது சோவியத் தேசமே. சீனாவின் மாவோக்கள் சியன்காய் செக்கிடம் சாப்பிட்டுவிட்டு 6000 மைல்களின் பின்னர் இறங்கி தரித்த இடமும் சோவியத் எல்லையிலே. அன்று சோவியத் தேசம் சீனாவின் முகாம்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கி மாவோக்களின் போராட்டத்தை வலுப்படுத்தவில்லை என்றால் சில சந்தர்ப்பங்களில் சீனாவில் மாவோ இல்லாது போயிருக்கலாம். அவ்வாறெனின் இன்று இருக்கக்கூடிய சீனாவும் இல்லாமல் இருந்திருக்கும். அவ்வாறெனின் இன்று சீனாவை ஆட்சி செய்வது அன்று மாவோக்களோடு தோல்வியுற்ற தாய்வானிற்கு கீழ்படிந்த சியன்காய் செக்கின் பரம்பரையாகவும் இருந்திருக்க கூடும்.

அதேபோன்று சோவியத்தேசம் உலகத்தினுடைய முதலாளித்துவம் முற்போக்கு தலைவர்களுக்கு உதவி வழங்கியது. உலகம் முழுவதும் ஏகாதிபத்திய விரோதத்தை தொடராக மேற்கொண்டு உலகத்துக்கு விடுதலையை பெற்றுக் கொடுத்தலையே சோவியத் எண்ணக்கருவாக இருந்தது. அதற்கேற்ப எங்களுடைய நாட்டில் பண்டாரநாயக்கக்கள் மூலம் பாரிய கைத்தொழில் கட்டமைப்பு சோவியத் தேசத்தினால் எமக்கு கிடைக்கப்பெற்றது. அந்த சோவியத் உடமைகளையே இன்றும் ராஜபக்சக்கள் விற்பனை செய்து கொண்டிருப்பது. அந்த பெரிய தேசமே 1991 ஆம் ஆண்டு மேற்கத்தேய சூழ்ச்சிகளால் வீழ்ச்சி அடைந்தது. உண்மையில் சோவியத் தேசத்துக்கு நடைபெற்றது தங்களைப் பற்றியே யோசிக்காமல் ஏனையவர்கள் பற்றி நினைக்க முற்பட்டதாகும். அன்று சமத்துவ தன்மை கொண்ட சீனா பின்பற்றியது அதற்கெதிரான பக்கத்தையே. தனி சீனா தொடர்பில் சீனா வலுவடையும்போது சோவியத் தேசம் அது பற்றி யோசிக்காத தன்மையினால் முறிவடைந்தது. எவ்வாறு இருப்பினும் அந்த சோவியத் தேசம் இன்று வரை இருந்திருந்தால் நாங்கள் கழிக்கின்ற வாழ்க்கையானது இதனை விட சிறப்பானதாக அமைந்திருக்கும். உலகத்தில் இதனைவிட அழகாக அமைந்திருக்கும். அந்த கெளரவம் அன்று இருந்த சோவியத் தேசத்திற்கு உரியதாகும்.

இன்று இருக்கக்கூடிய ரஷ்யா ,உக்ரைன், பெலாரஸ்,லித்துவேனியா, லட்வியா,மோல்தோவியா உட்பட 14 நாடுகள் தான் அன்றைய சோவியத் தேசமாக இருந்தது. அன்று மேற்கத்தைய சூழ்ச்சிகள் முன் உடைந்துபோன ரஷ்யா நான்கு பக்கங்களும் வீழ்ச்சியடைய தொடங்கியது. அன்று ரஷ்யாவை குறிப்பிட்டது அதியுத்த தன்மைகொண்ட மூன்றாவது உலக நாடு என்று. சோவியத் தேசம் அன்று முறிவடைந்த முறையை பார்த்த மேற்கத்தேய ஒருபோதும் இவ்வாறு மீண்டும் வலுவான நிலைக்கு ரஷ்யா உருவாகும் என்று நினைக்கவில்லை. அன்று சோவியத்தின்கீழ் முறிவடைந்த சில நாடுகள் நேட்டோவுக்கும் ஐரோப்பிய சங்கத்துக்கும் இணைத்துக் கொள்ளப்பட்டன. இருப்பினும் அவ்வாறு பிரிந்து சென்ற நாடுகளில் ரஷ்யா,உக்ரேன், பெலாரஸ்,மோல்தாவியா போன்ற நாடுகள் தொடர்ச்சியாக இருந்து மேற்கத்தேய எதிர்ப்பு நிலையிலே. அன்று அவர்கள் ஒரு கூட்டணி நண்பர்களாக பிரதிநிதித்துவம் செய்தார்கள். இந்த காலத்தினுள் ஜனாதிபதி புட்டின் ரகசியமான முறையில் ரஷ்யாவை கட்டி எழுப்பினார்.

புட்டின் என்பவர் அன்று சோவியத்தேசத்தின் கேஜிபி உளவுச் சேவையின் பிரதானி. ஆன்தர்போப்பிற்கு பின்னர் கேஜிபி யின் இருந்த வலுவான பிரதானி அவரே என குறிப்பிடுகின்றனர். அந்த அனைத்து அனுபவமும் கொண்ட புட்டின் மிக குறுகிய காலத்திற்குள் ரஷ்யாவை மீண்டும் உலகத்தினுடைய வலுவான நாடாக மாற்றினார். உண்மையில் 90 அரைப்பகுதிகளில் ரஷ்யா மீண்டும் எழுந்து விட்டது. ரஷ்ய மக்களது ஆன்மீக தன்மையை புட்டின் சரியான முறையில் விளங்கினார். எந்த ஒருவருக்கும் பணியாத எந்த ஒருவருக்கும் பயமின்றிய தன்மையே ரஷ்யாவின ஆன்மீக தன்மையாக காணப்பட்டது. புட்டின் ரஷ்யாவை எழுச்சியடையச் செய்து உலகத்திற்கு சவாலாக மாற்றி அமைக்கும் வரை மேற்குலகிற்கு தெரியாது ரஷ்யா எழுச்சி பெற்றுவிட்டது என. அது அவ்வாறான உன்னத தேசிய போராட்டமாகும். புட்டின் அபிவிருத்தியை போன்று யுத்த இயலுமையையும் ரஷ்யாவை உலகத்துக்கு உரியவாறு மாற்றினார். இதனை தெரிந்தநாள் தொட்டு மேற்கத்தேயம் மீண்டும் ரஷ்ய விரோத சூழ்ச்சிகளை ஆரம்பித்தது. அவர்களுக்கு அவசியமாக இருந்தது ரஷ்யாவை சூழ்வதாகும். ரஷ்ய எல்லைப்புறங்களில் நேட்டோவின் மிசைலை கொண்டு வருவதாகும்.

நேட்டோவின் கூடிய அதிகார எல்லைக்குள் ரஷ்யாவை வைத்திருப்பதற்கே. அதற்காக எல்லைப்புற நாடுகளில் ரஷ்யா சார்பான அதிகாரத்தை மாற்றியமைத்து மேற்கத்தேய பொம்மைகளை அதிகாரத்துக்கு கொண்டு வந்தார்கள். உக்ரேனுக்கும் அதுதான் நடைபெற்றது. உக்ரேனில் இருந்த ரஷ்யா சார்பான அதிகாரத்தை மாற்றியமைத்து மேற்கத்தேய சார்பான பொம்மைகளை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. அந்த மேற்கத்தேய பொம்மைகள் வரிசையில் ஒருவர்தான் ஜனாதிபதி சொலன்ஸ்க்கி. இதற்கு முன்னரும் ரஷ்யாவின் அபிலாசைகளை மீறிச் செயற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்தது. 2014 இல் ரஷ்யா உக்ரேனை ஆக்ரமித்து கிரீமியாவை தனது ஆதிக்கத்தின் கீழ் எடுத்துக்கொண்டது. நேட்டோ செயற்பாடுகள் உக்ரேனில் அதிகமாக நடைபெறுகின்ற போது உக்ரேனினுள் ரஷ்யாவின் செயற்பாடுகளும் அதிகரித்து காணப்படும். உக்ரேனிலிருந்து விலகி சுயாதீனத்தை கேட்ட மக்கள் குழுக்களுக்கு ரஷ்யா உதவி செய்தது. டொனெக்ஸ்,டொன்பாஷ் என்பது அவ்வாறான இரண்டு பிரதேசங்களாகும்.

அதேபோல் ரஷ்ய உளவுச்சேவை உக்ரேனினுள் செயற்பட்டது. சோலன்கியை விட்டால் அவ்வெறிக்கை கிரம்லினனுக்கு வந்தது. இனி அடுத்த சந்தர்ப்பம் வந்துவிட்டது. இன்று ரஷ்யாவின் பொறுமை காக்கும் எல்லை கடந்துவிட்டது. சில சந்தர்ப்பங்களில் புட்னின் மீண்டும் திரும்புவது சிலவேளை கல்யுகத்திற்கு அனுப்புவதற்ககோ தெரியவில்லை. அது உலகத்திற்கு சாதாரணமாக காரணமின்றி காணப்பட்டாலும் ரஷ்யாவுக்கு நியாயமானதாகும். அதனால் இந்த யுத்தத்தை எந்த இடத்தில் தடுத்து நிறுத்த முடியுமோ என்பதனை யாரும் சொல்ல முடியாது. இருப்பினும் இந்த பிரச்சினைக்கு நேட்டோ நடுநிலை வகிக்காமல் இருந்தால் குறைந்தது உக்ரேனை கல்யுகத்திற்காவது அனுப்பி யுத்தம் நிறுத்தப்படும். இல்லை என்றால் மூன்றாம் உலக மகாயுத்தம் ஏற்படும். அதற்கும் தயாராக இருக்கின்றார் புட்டின். தற்போது சைபீரியாவில் உள்ள இரசாயன களஞ்சியத்தை இலக்குவைத்து முடிந்துவிட்டது. உண்மையில் புட்டின் ரஷ்யா இல்லாத ஒரு உலகத்தை மீதம் வைக்கப்போவதில்லை. அதுதான் புட்டின். புட்டின் மற்றும் ரஷ்யாவுக்கு இருக்கக்கூடிய பிணைப்பு சிஎன்என், பிபிசி,France 24, அல்ஜசீரா போன்ற மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிடுவதைபோன்று பாரிய மாற்றம். அதனால் புட்டினை குறைத்து மதிப்பிடுவது இன்னுமொரு தவறை மேற்கொள்வதற்கான பிரயத்தனமாகும்.

அவ்வாறாயின் போய் வருகின்றேன்
கடவுள் துணை, வெற்றிகிட்டட்டும்

இப்படிக்கு
ரட்டே ரால

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி