1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இன்று எமது நாட்டினுடைய முக்கியமான பிரச்சினைகள் இரண்டு காணப்படுகின்றது ஒன்று மின்சார நெருக்கடி மற்றயது எரிபொருள் நெருக்கடி. உண்மையில் இந்த நெருக்கடிகள் இரண்டினால் நாட்டினுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அரசசேவை, போக்குவரத்து, பொது போக்குவரத்து சேவை, விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் உட்பட அனைத்தும் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்திற்கு முன்னர் இருந்த எரிபொருளுக்கான வரிசை தற்போது எதிர்பார்க்காத வகையில் கிலோ மீட்டர் வரை நீண்டு கொண்டு செல்கின்றது. அதே போன்று பெரல் வரிசையும் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வளவு பெரல் இருந்ததா என்று நினைக்கத் தோன்றுகின்றது. தற்போது இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சினை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இன்மை.

மக்கள் இவ்வரிசையில் இருப்பது எரிபொருள் பவுசர் வரும் என்ற நம்பிக்கையில். அதேபோன்று அந்த வரிசையில் இருந்து கொண்டுதான் மக்கள் தங்களிடையே முரண்பட்டு சண்டையிட்டும் கொள்கிறார்கள். அதேபோன்று அந்த எரிபொருள் வரிசையிலிருந்து தான் மக்கள் தங்களுடைய உணவுகளையும் உட்கொள்கிறார்கள்.

எரிபொருள் வரிசையில் இருந்து மக்கள் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர்,வலுசக்தி அமைச்சரிற்கு அரசாங்கத்திற்கு சாபமிடுகின்றனர். அடுத்ததாக இந்த மின் நெருக்கடி 7.30 மணித்தியாலயங்களாக தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. சில சமயம் 10 மணித்தியாலங்கள் அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

உண்மையில் எங்களுடைய நாட்டினுடைய இயல்பு வாழ்க்கை போன்று கைத்தொழில் கட்டமைப்பு, பொருட்கள் மற்றும் சேவை வழங்கல் என்பன இம்மின் நெருக்கடி காரணமாக பாரிய பாதிப்புக்குட்பட்டுள்ளது. வீட்டிலிருந்து ஏற்பட்ட சாபமானது தற்போது தணிந்தபோதும் அது வெளியிலிருந்து ஏற்படுத்தப்பட்டு வரும்சாபத்திற்கு இரண்டாம் இடம் அல்ல.

இன்று எல்லாம் இவ்வாறு நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி விசேட கூட்டம் ஒன்றை (2)ஏற்பாடு செய்திருந்தார். பிரதமர் மஹிந்த,பெசில்,லொக்குகே, ஜோன்ஸ்டன் உள்ளிட்ட அமைச்சர்கள் போன்று மின்சார சபையின் உத்தியோகத்தர்கள், அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள், ஜனாதிபதி ஆலோசகர்களும் அனைவரும் இருந்தார்கள்.

அந்த இடத்தில் ஜனாதிபதி குறிப்பிடுவது எரிபொருள் கொண்டு வருவதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளுங்கள் என்று.எண்ணெய் இருப்பு மட்டத்தை பேணுவதுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தொடராக எரிபொருளை வழங்குங்கள் என்று. அடுத்ததாக தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குங்கள் என்று.

5ஆம் திகதிக்கு பின்னர் மின்சாரம் துண்டிக்கப்படாது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதாவது இன்னும் இரண்டு நாட்கள். ஜனாதிபதி அவ்வாறு குறிப்பிட்டதாக காமினி லொக்குகே மற்றும் ஜோன்ஸ்டனும் உறுதிபட கூறினார்கள். எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி அக்கதையை குறிப்பிட முன்னர் பெசிலும் அந்த கதையை குறிப்பிட்டிருந்தார்.

5ஆம் திகதிக்கு பின்னர் மின்சாரம் துண்டிப்பு போன்று எரிபொருள் வரிசையும் ஏற்படாது என்று பெசில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்னரும் அதே போன்று அழகிய கதைகளை காமினி லொக்குகே போன்று கம்மன்பிலவும் குறிப்பிட்டிருந்தார். கம்மன்பில விலை அதிகரிக்காது என்று குறிப்பிட்டு வாயை எடுப்பதற்கு முன்னரே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. அடுத்ததாக லொக்குகே மின்சாரம் துண்டிக்கப்படாது என்று குறிப்பிட்ட voice cut முடிவடைய முன்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அதேபோன்று பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க ஏப்ரல் மாதம் வரை மின்சாரம் துண்டிக்கப்படாது என்று குறிப்பிட்டு 24 மணித்தியாலங்கள் செல்வதற்குள் அவரே முன்வந்து மின்சாரம் துண்டிப்பு தொடர்பான கால அட்டவணையை முன்வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அடுத்ததாக அந்த கதையை நேற்று முன்தினம் பெசில் குறிப்பிட்டிருந்தார். நேற்று ஜனாதிபதியும் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு ஜனாதிபதி சொல்வதாயின் அதனை சும்மா குறிப்பிடமாட்டார்.

இவ்வளவு காலமும் இந்த நாட்டினுடைய மக்கள் நினைத்திருந்தது ஜனாதிபதிக்கு எதனையும் செய்ய முடியாது என்று. தற்போது ஜனாதிபதி அதிசயம் ஒன்றை காட்ட முயற்சிக்கிறார். அவர் தொடர்பில் இருந்த அனைத்து தவறான எண்ணங்களை எல்லாம் இல்லாமல் செய்து அவர் ஒரு வேலை செய்யக்கூடியவர் என்பதை காட்டுவதற்கு முயற்சிக்கின்றார்.

உண்மையில் 5ஆம் திகதிக்கு பின்னர் மின் துண்டிப்பு இல்லையெனின் எரிபொருள் வரிசை இல்லை என்று சொன்னால் அது ஒரு பெரிய வேலைதான். உண்மையில் அது ஒரு அதிசயம் தான். அது அதிசயமாக அமைவது இவ்வாறு. தற்போது எமக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு தடையாக இருந்தது டொலர் இன்மையே. தற்போதும் எரிபொருள் கப்பல் பல கடலில் பணம் செலுத்த முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

உண்மையில் டொலரில்லை. அதனால் அந்த கப்பல் கடலில் பல நாட்கள் தாமதித்த கட்டணத்தையும் செலுத்தி தான் அதனை பெறவேண்டிய நிலை. இவ்வாறு இருக்கும்போது இந்த இடத்தில் இருக்கக் கூடிய முக்கியமான பிரச்சினை இதுதான். தற்போது 5ஆம் திகதிக்கு பின்னர் வருகின்ற அந்த எரிபொருளை இறக்குவதற்கு எங்கிருந்து பணம் வந்தது என்பது.

உண்மையில் ஒரே சந்தர்ப்பத்தில் டொலர் வருவதற்கு டொலர் கோரிக்கையாவது இருந்ததா? அடுத்ததாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் இருந்த நிலையல்ல தற்போது உலகத்தில் இருப்பது. ரஷ்யா - உக்ரேன் முரண்பாடு காரணமாக உலகத்தில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. தற்போது ஒரு எரிபொருள் பீப்பாயின் விலை 116 டொலராக உயர்வடைந்துள்ளது. அடுத்ததாக எரிபொருள் விநியோகம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக ஒரு வாரத்துக்கு முன்னர் உக்ரேன்- ரஷ்யா முரண்பாடு இல்லாத சந்தர்ப்பத்தில் சில எரிபொருளை பெற்றுக் கொள்ளமுடியாத அரசாங்கத்திற்கு ஒரே சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது.

தற்போது யாராவது சொல்லலாம் எவ்வாறு சரி எரிபொருள் சிலவற்றையாவது வழங்கினால் சரிதானே என்று.ரட்டே ரால சொல்வது எப்படியாவது சரி அல்ல எப்படி அதனை வழங்குவதென்று நாட்டுக்கு குறிப்பிட வேண்டும். ஏனென்றால் ரட்டே ரால உண்மையில் ஒருபோதும் ராஜபக்சக்களை விசுவாசிப்பது கிடையாது.நாட்டை விற்றா எரிபொருள் கொண்டு வருவது.

இல்லையென்றால் இந்தியாவுக்கு முழுமையாக எரிபொருள் விநியோகத்தை வழங்கியா? இல்லை என்றால் இதுவும் ஒரு பொய்யான பொம்மலாட்டமா? இந்த மூன்றில் ஏதாவது ஒன்றாக அமையலாம். இந்த மூன்றும் இல்லாத வேறு ஒரு காரணமாகவும் இருக்கலாம். எவ்வாறு இருப்பினும் அந்த ஒருமுறை எவ்வாறு என்னவென்று தெரிகின்ற உரிமை மக்களுக்கு இருக்கின்றது. உண்மையில் அவ்வாறு இல்லை என்றால் இந்தப் பொறிமுறையில் அசமந்த போக்கு இருந்து நேற்று ஜனாதிபதிக்கு தெரிந்து அதிர்ந்ததாக இருந்திருக்கக்கூடும்.

எவ்வாறு இருந்தபோதிலும் இக்கருத்து ஜனாதிபதிக்கு பாரிய சவால்களை ஏற்படுத்தும். இவ்வளவு காலமும் ஜனாதிபதி குறிப்பிடுபவை உண்மையாக அமையவில்லை. அதனால் ஜனாதிபதி கூறுமர கதைகளை மக்கள் விசுவாசம் கொள்வதில்லை. தற்போது அது இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது. இந்த முறையும் குறித்த வேலை பிழைக்குமானால் அது ஜனாதிபதியின் தனித்தன்மைக்கு பாரிய பிரச்சனையாக அமையும். அவ்வாறெனின் நாட்டு மக்கள் இதனை விளங்கிக் கொள்வது ஜனாதிபதிக்கு யாரோ ஒருவர் கயிற்றை வழங்கியுள்ளார் என்று. இல்லை என்றால் அவர் வேண்டும் என்று பொய்யை கூறுகின்றார் என்று.ரட்டே ராலவென்றால் அவர் வேண்டுமென்று பொய் கூறுகின்றார் என நினைத்தது கிடையாது. ஏனென்றால் 5ஆம் தேதிக்கு பின்னர் இந்த வேலை அகப்படும் தானே.

எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதியே நடுநிலை வகித்து இந்த வேலையை செய்வது சிறப்பானதாக இருக்கும்.ரட்டே ரால குறிப்பிட்டது போன்று நாட்டை விற்பனை செய்யாமல். எங்களுடைய நாட்டின் எரிபொருள் வழங்கலை வேறு ஒரு நாட்டினுடைய அதிகாரத்திற்கு வழங்காமல் வேலையை செய்வதால் எவ்வளவு சிறப்பானது? அந்த கௌரவம் ஜனாதிபதிக்கு கிடைக்கும். இருப்பினும் அவ்வாறு நடந்தால் மீண்டும் சஜித்,அனுர திசாநாயக்க,பாட்டலி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு பேசி எந்த பலனும கிடையாது.

அந்த பொறுப்பை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும். இருப்பினும் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றது. ஜனாதிபதி மீண்டும் பரிசீலனையே அவர் மூலமே மேற்கொள்ளவேண்டும்.அவர் சித்தியடைவாரா,சித்தியடையமாட்டாரா என்பதனை பார்ப்போம். ஒரு முறை இரண்டு முறை ஆகிய சந்தர்ப்பங்களில் சித்தியடைய தவறியவர்கள் பரீட்சையில் சித்தியடைந்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன.ரட்டே ராலவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார்.

அப்படியாயின் போய் வருகின்றேன்.

கடவுள் துணை .

வெற்றி கிட்டட்டும்.

இப்படிக்கு,

ரட்டே ரால,

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி