1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கார்கிவ் அருகே நடந்த சண்டையின் போது உக்ரைன் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படைகளின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தெரிவித்துள்ளது.

 

இந்தநிலையில் தமது தாக்குதல்களின்போது ரஷ்யாவின் பல மூத்த இராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் என்று உக்ரைன் இராணுவம் கூறுகிறது.

மேலும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கொல்லப்பட்டவர்- விட்டலி ஜெராசிமோவ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர், ரஷ்யாவின் மத்திய 41 வது இராணுவத்தின் முக்கிய ஜெனரல், தலைமைத் தளபதி மற்றும் முதல் துணைத் தளபதி ஆவார்.

கொல்லப்பட்ட ஜெராசிமோவ் இரண்டாவது செச்சினிய போரிலும் சிரியாவில் ரஷ்ய இராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்றதாக உக்ரேனிய உளவுத்துறை கூறுகிறது.

விட்டலி ஜெராசிமோவ் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தெரிவித்திருந்தாலும், ரஷ்ய அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பில் இன்னும் கருத்து கூறவில்லை.

ஆனாலும் உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்மார்கள், மனைவிகள், மற்றும் நண்பிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடினின் காணொளி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உக்ரைன் மீது படையெடுப்பதற்காக அனுப்பப்பட்ட துருப்புக்களைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும் என்று புடின் கூறியுள்ளார்.

இன்று (08) அதிகாலை இந்த காணொளி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காணொலியில், புடின் "எங்கள் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் தாய்மார்கள், மனைவிகள், சகோதரிகள் மற்றும் தோழிகள்" என்று படையினர் தொடர்புடைய பெண்களை விளித்துள்ளார்.

“உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீங்கள் எவ்வளவு கவலைப்படுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

இந்தநிலையில் முழு நாடும் அவர்களுக்காக பெருமைப்பட்டு உணர்வது போல, நீங்கள் அவர்களைப் பற்றி பெருமைப்படலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

உக்ரைனில் போர் நடவடிக்கைகளில் ரஷ்ய படையினர் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ரஷ்ய படையினர் ரஷ்ய மக்களுக்கு பாதுகாப்பையும் அமைதியையும் நம்பகத்தன்மையுடன் உறுதி செய்வார்கள் என்று தாம் நம்புவதாக புடின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி