1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

"தேசிய அரசு என்பதற்கு அப்பால், இணக்கப்பாட்டுடனான தேசிய வேலைத்திட்டமொன்றே தற்போது அவசியம் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு, கிருலப்பனைபயில் நேற்று (13) நடைபெற்ற கட்சி மறுசீரமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டு, பாரியதொரு அலைக்குள் சிக்கியுள்ளது. அதுமட்டுமல்ல எதிர்வரும் ஜுன் மாதம் கடன் செலுத்த வேண்டியும் உள்ளது.

எனவே, தேசிய அரசு என்பதற்கு அப்பால், இணக்கப்பாட்டுடனான தேசிய வேலைத்திட்டமொன்றே தற்போது அவசியம்.

சர்வகட்சி மாநாட்டுக்கு முன்னர், சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை அரசால் வெளியிடப்படும் எனவும் நம்புகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி