1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, நாட்டுமக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது.

பொருட்களின் விலை அதிகரிப்புக்கு ஈடு கொடுக்க முடியாது மக்கள் திணறி வரும் நிலையில் பற்றி எரியும் ஊரில் குளிர்காயும் சில குள்ளர்களின் செயல் மக்களை பெரும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.

வர்த்தக மாபியாக்கள் பொருட்களை பதுக்கி விலை அதிகரிக்கப்பட்டதன் பின்னர் அதனை விற்று இலாபம் ஈட்டுவதை மட்டுமே குறியாக கொண்டு செயற்படுகின்றன.

இது போன்று அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 4,000 எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார் நேற்று (15) கைப்பற்றியுள்ளனர்.

ரன்னவில் உள்ள எரிவாயு சேமிப்புக் கிடங்கு ஒன்றில் இவ்வாறு எரிவாயு சிலிண்டர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இரண்டு கொள்கலன்கள் மற்றும் இரண்டு லொறிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12.5 கிலோ மற்றும் 3.5 கிலோ சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மக்களுக்கு விற்பனை செய்ய முகவர்களிடையே விநியோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சில எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் மக்களுக்கு விற்கப்பட்டதோடு, மீதமுள்ளவை ரன்னாவில் உள்ள எரிவாயு விநியோக மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று, எரி பொருளை மறைத்து வைத்து குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கையை சில எரிபொருள் நிலையங்கள் மேற்கொண்டுவருகின்றமை தெரியவந்துள்ளது.

மக்கள், தமது அன்றாடம் உணவுக்கும் அத்தியவசிய தேவைகளுக்கும் அவதியுரும் நிலையில் இத்தகைய குண்டர்களின் செயல் மக்களை மேலும் மேலும் விரக்திக்கும் நெருக்கடிக்கும் உள்ளாக்கி வருகின்றது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி