1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

காணாமல் போனோருக்கு 1 இலட்சம் ரூபா பணம் மற்றும் காணி வழங்குவதற்கு நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை மனித உரிமை ஆர்வளர்கள் மற்றும் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஐ.நா கூட்டத்தொடரின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு இலங்கைக்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை அரசு எடுத்துள்ளது.

எவ்வாறாயினும் ஒரு தசாப்தகாலமாக தமது காணமாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்க நீதி வேண்டி போராடிவரும் உறவுகளின் உணர்வுகளுக்கு அரசாங்கம் வழங்கும் மதிப்பு இவ்வளவு தானா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது.

'ஒரு உயிரின் பெறுமதி ராஜபக்ஷர்களுக்கு வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே, இது அவமரியாதை செய்யும் வகையிலான மிகமோசமான செயல்" என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

kanamal

காணாமல்போனோரின் குடும்பங்கள் மரணச் சான்றிதழையோ அல்லது இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என்றும் மாறாக அவர்கள் உண்மையையும் நீதியையுமே கோருகின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த அரசாங்கம் எந்தவொரு தரப்பினரையும் பொறுப்புக்கூறச் செய்வதற்கான நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் மாறாக அவர்கள் உண்மையையும் நீதியையும் குழிதோண்டிப் புதைப்பதற்கே முயற்சிக்கின்றார்கள் என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை இவ்விடயம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான த்யாகி ருவன்பத்திரன அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காணாமல்போனோரின் பெரும்பாலான குடும்பங்கள் மரணச்சான்றதழையோ அல்லது இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை. மாறாக அவர்கள் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையையே எதிர்பார்க்கின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தால் கண்டறிப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்டு காணக்கிடைக்கவில்லை எனும் சான்றிதழைப் பெற்றுள்ள காணாமல் போன நபரின் நெருங்கிய உறவினருக்கு மீள்வாழ்வளிப்பதற்காக இந்த கொடுப்பனவானது ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதேவேளை, 2016 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க காணாமல் போனோர் பற்றிய அலுவலக சட்டத்தின் மூலம் காணாமல் போனோர் தொடர்பாக சரியான விசாரணைகளை நடாத்திய பின்னர் இறப்புச் சான்றிதழ் அல்லது காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை வழங்குவதற்காக பதிவாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் கடந்த 4 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் நடைபெற்றது. அதன்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து கடும் அதிருப்தி வெளியிடப்பட்டது.

இதில் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பின்னர் அரசு ஐ.நாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஐ நா கூட்டத்தொடருக்கு முன்பிருந்தே அரசு பல வெளி பூசல்களை மேற்கொண்டு வந்தபோதும், அவை ஐ நாவில் அரசாங்கம் எதிர்பார்த்த அவ்வளவு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை.

அந்நிலையில் அரசின் இந்த அறிவிப்பு சர்வதேசத்தில் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட போகின்றது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி