1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புலம்பெயர் தமிழர்களிடம் முதலீடுகளை கோருவதால் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படாதா? என வடக்கின் அரசியல் கட்சியொன்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தமிழர் தேசத்தை அங்கீகரி, எமது இனத்தை அழிக்க பெற்ற ஆயுதங்களுக்கு தமிழர்கள் பொறுப்பாளிகளா, அன்று ஆயுதத்தால் அழித்தாய் இன்று பட்டினியால் அழிக்கிறாய் தமிழர் தேசத்தை அங்கீகரித்தால் மட்டுமே புலம்பெயர் தமிழர்கள் முதலிடுவர் போன்ற கோசங்கள் எழுப்பபட்டது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். “சமீபத்தில், வெளிநாடுகளில் வசிக்கும் பல அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக அரசாங்கம் தடை உத்தரவைப் பிறப்பித்தது. தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், புலம்பெயர்ந்தோரின் முதலீடுகளைப் பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது” என்றார்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ராஜபக்ஷ அரசுக்கு தேசிய பாதுகாப்பில் இப்போது பிரச்சினை இல்லை என்பதையே காட்டுகிறது” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி