1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையில் எதிர்காலத்தில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றமை குறித்து அனுமானிக்க முடிவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று நாடாளுமன்ற அமர்வில்  கலந்துகொண்டு விசேட உரையொன்றை நிகழ்த்திய போது குறிப்பிட்டார். 

இலங்கை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறான பொருளாதார நெருக்கடி ஆரம்பமாகியுள்ள சூழ்நிலையிலேயே, இன்று நாட்டின் அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறுகினார்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, எதிர்காலத்தில் மேலும் உக்கிரமடையும் சாத்தியம் காணப்படுவதாக பொருளியல் நிபுணர்களை மேற்கோள்காட்டி அவர் கருத்து வெளியிட்டிருந்தார். 

நாட்டில் இன்று எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு மேலாக சென்று, கடுமையான உணவு பஞ்சம் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அனுமானிக்க முடிகின்றது  நாடாளுமன்றத்தில் தாம் செயற்படும் விதத்திலேயே இதனை கட்டுப்படுத்த முடியும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனால் அவர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தான் போலீஸ் மாஅதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக ஜனநாயக ரீதியில் தீர்வு காண முடியும். அதனை நாங்கள் செய்ய தவறினால் அதனால் பாதிக்கப்படப்போவது முழு பாராளுமன்றமுமாகும். 

அதனால் இந்த வார இறுதிக்குள் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கான பொதுவான வேலைத்திட்டத்தை வகுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.எனவே நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக ஜனநாயக ரீதியில் தீர்வு காண முடியும். 

அதனை நாங்கள் செய்ய தவறினால் அதனால் பாதிக்கப்படப்போவது முழு பாராளுமன்றமுமாகும். அதனால் இந்த வார இறுதிக்குள் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கான பொதுவான வேலைத்திட்டத்தை வகுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.


 நாங்கள் அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கையிலேயே  ஆயிரக்கணக்கான உயிர்களின் பெறுமதி மற்றும் பாராளுமன்றத்தின் கெளரவம் தங்கி இருக்கின்றது என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி