1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

 முன்னதாக பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருந்ததாக தகவல் வெளியான போதும் பின்னர் அதனை மறுத்து பிரமர் ஊடக பிரிவு அறிக்கை வெளியிட்டிருந்தது.

எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினரையும் பதவி விலக கோரி மக்கள் போரடி வருகின்றனர். இந்நிலையில் பதவி விலகுவதில்லை என்ற தீர்மானத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 பிரதமர் பாவி விலகினால் மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அரசாங்கம் தோற்கடிக்கப்படும் என்ப உறுதி. 

இதன் காரணமாக பிரதமர் தனது பதவி விலகும் எண்ணத்தை மாற்ற தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட இணைப்பாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார். மகிந்த ராஜபக்சவை நீக்கினால் அரசாங்கம் கவிழும் என்பது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றாகவே தெரியும். 

இந்த அரசாங்கம் பிரதமரைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளது. எனவேதான் பிரதமர் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கின்றனர். மகிந்த ராஜபக்ச பிரதமராக இருக்கும் போது அமைச்சர் டலஸ் பிரதமருக்கு எதிராக கையை உயர்த்த முடியாது. சுயாதீனமாக இருப்பவர்களில் பலருக்கும் முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் பிரதமருக்கு அரசியல் ரீதியாகக் கடமைப்பட்டிருக்கிறார்கள். 

எனவே, இந்த நேரத்தில் பிரதமர் பதவி விலகக் கூடாது என ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களும் ஏகமனதாக கூறி வருகின்றனர். எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் மகிந்த ராஜபக்ச இந்த நேரத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டார்” என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 

அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதா? 

இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்போது அரசியல் நெருக்கடியாக மாறிவருவதை வலியுறுத்தி, சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

அதாவது 11 அம்ச பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களைக் கொண்ட தேசிய நிறைவேற்று சபையொன்றை அமைக்கவும், புதிய பிரதமரை நியமிக்கவும், நிர்வாக சபையின் ஆலோசனையின் பேரில் மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சரவையை நியமிக்கவும் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதியிடம் முன்மொழிந்தது. 

குறித்த பிரேரணை தொடர்பில் ஜனாதிபதிக்கும் சுயேட்சை பாராளுமன்ற குழுவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் நேற்று (10) இரவு 7 மணியளவில் ஆரம்பமானது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்த 11 அம்ச தீர்மானத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டது.

 குறித்த பிரேரணையில் ஜனாதிபதி பல திருத்தங்களைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்பங்கள் குறித்தும், புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் பிரதமரை நியமனம் அல்லது புதிய அமைச்சரவையை நியமனம் குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்படவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஏற்கனவே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும், சில நாட்களுக்கு முன்னர் பதவி விலகிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் வெளியான போதும் புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி இன்று அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்யப்படாது என தெரிவிக்கப்படுகிறது.

புதிய அமைச்சரவைக்கான நியமனங்கள் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள இந்து புத்தாண்டுக்குப் பின்னர் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் அனேகமாக இடம்பெறும் என அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி