1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஒரு வார கால ஹர்த்தால் மற்றும் கூட்டு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு!நாளை (20) முதல் ஒரு வார காலத்திற்கு நாடு முழுவதும் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக 300க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நாளை முதல் இம்மாதம் 28ஆம் திகதி வரை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக 'தொழிற்சங்கம் மற்றும் வெகுஜன அமைப்பு' சார்பில் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 28 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவும், அரசாங்கம் பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து முடிவெடுக்கும் வரை தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடரவும் தொழிற்சங்கங்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளன.

கோட்டகோ கமவில் இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் மற்றும் பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையை இராஜினாமா செய்தல் உள்ளிட்ட ஜனநாயக மாற்றங்களைக் கோரி கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று 11ஆவது நாளாக தொடர்கிறது.

விடுமுறை முடிந்து சில நாட்களாகியிருந்த போதிலும் இன்று காலி முகத்திடல் கட்சி சார்பற்ற போராட்டத்தில் மக்கள் பஞ்சமில்லாது கலந்துகொண்டனர்.ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி