1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தான் ஒரு போதும் பதவி  விலகத் தயாராக இல்லை என்றும், எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைக் காட்டினால் மட்டுமே பதவி விலகத் தயார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று (26) இடம்பெற்ற அமைச்சர்களுக்கும் மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கும் இடையிலான சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

யாருக்காவது முடிந்தால் தம்மை பதவியிலிருந்து விலகச்செய்யுமாறும் பிரதமர் சவால் விடுத்துள்ளார்.

ஏற்கனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் இவ்வாறு தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தின் போது மக்களின் கோரிக்கைகளுக்கு மத்தியிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 'மொட்டு' அரசாங்கத்தை தொடர்ந்து ஆட்சியில் அமர்த்துவதற்கு மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியம்  தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளனர்.

ஏப்ரல் 28 ஆம் திகதி ஒன்றிணைந்த அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியம்  தெரிவித்துள்ளது. அத்தோடு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக்கூடாது என மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியம் இதன் போது ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த, தான் பதவி விலக போவதில்லை என்றும் அது குறித்து அச்சம் கொள்ள வேண்டம் என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த தினத்தில் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிட்டுள்ள அறிக்கை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு கோரி, ஏப்ரல் 4ஆம் திகதி பிரதம பீடாதிபதிகள் அனுப்பிய கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் திருகோணமலை மகாநாயக்கர்களிடம் தமது அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்க உதவுமாறு குறித்த அறிக்கையில் அரச தரப்பு கோரியுள்ளது.

இதனிடையே சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தினத்தை நடத்த தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளும் முடிவு செய்துள்ளன. மே தின அணிவகுப்பு ஸ்டான்லி ஜேன் மைதானத்தில் ஆரம்பமாகி காலி முகத்திடல் போராட்ட மைதானத்தில் பேரணியாக நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி