1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

60 வகையான மருந்துகளுகளின் விலைகளை  40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில், “ஒவ்வொரு வர்த்தகர், விநியோகஸ்தர், மருந்தாளுநர், மருத்துவப் பயிற்சியாளர், பல் மருத்துவர், கால்நடை மருத்துவர், தனியார் மருத்துவ நிறுவனம், மருந்தகம் அல்லது திட்டமிடப்பட்ட மருந்துகளை வைத்திருப்பவர் உள்ளிட்ட மருத்துவ நிறுவனம் விற்பனையானது திட்டமிடப்பட்ட மருந்துகளின் விலையை  பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

60 வகையான மருந்துகளுகளின் விலைகளை  40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

375 மில்லி கிராம் அமோக்ஸிசிலின் கிளாவ்லினிக் அமில மாத்திரையின் விலை 59.79 ரூபாவிலிருந்து 83.71 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

250 மில்லி கிராம் குளோரித்ரோமைசின் மாத்திரையின் விலையும் ரூ.86.31 ஆக உயர்ந்துள்ளது.

100 மில்லிகிராம் டொக்சிசைக்ளின் மாத்திரையின் விலை 17.07 ரூபாவாக இருந்ததுடன், புதிய விலை 23.90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 75 மில்லி கிராம் ஆஸ்பிரின் மாத்திரையின் விலை ரூ.5.06ல் இருந்து ரூ.7.08 ஆக அதிகரித்துள்ளது.

மெட்ஃபோர்மின் 500 மில்லிகிராம் மாத்திரையின் விலை 6.64 ரூபாவாக இருந்ததுடன், புதிய விலை 9.34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

29 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிராம் தைரொக்ஸின் மாத்திரையின் விலையும் 14.41 ரூபாவாக உயர்ந்துள்ளதாக உரிய வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருந்துகளின் விலைகள் முன்னதாக மார்ச் 15ஆம் திகதிய 2241/43 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் திருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள மாத்திரைகள் தொடர்பான விபரம்.

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி