1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

 அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு அதனை மீளப் பெறும் உரிமை இருக்கிறது என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எனினும் அந்த உரிமை அரசியலமைப்பில் உள்வாங்கப்படுமாயின் மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை அவர்களாலேயே பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் உத்தியோகபூர்வமாகக் கிடைக்கப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 நிர்வாக சேவை ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு மேலும் உரையாற்றிய அவர், நாட்டில் தற்போதுள்ள ஆட்சி முறைமை மாற்றமடைய வேண்டும் என்பதையே அனைவரும் கோருகின்றனர். 

1978 ஆம் ஆண்டு முதல் நாட்டில் காணப்படும் சர்வாதிகார முறையான நிறைவேற்றதிகார முறைமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் என்பவற்றில் சிக்கல் காணப்பட்டது. இந்த பிரச்சினைகள் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாரியளவில் வெடித்துள்ளன. 

எனவே இது பொருளாதார நெருக்கடியை மாத்திரம் நிவர்த்தி செய்து தீர்க்கப்படக் கூடிய பிரச்சினை அல்ல. இது என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

 “மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து சிறிது காலத்தின் பின்னர் அவர்களது பொய்களை கேட்டு ஏமாந்து கொண்டிருக்க வேண்டிய நிலைமையே ஏற்படும்” என்ற பிரான்ஸ் எழுத்தாளர் ஒருவரின் கருத்தை அடிக்கோடிட்டுக்காட்டிய அவர் இந்த முறைமை மாற்றமடைந்து பிரிநிதித்துவ ஜனநாயகம், பங்குபற்றல் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி