1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் (Julie Chung) டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமரை நியமிப்பதும் புதிய அமைச்சரவையை உடனடியாக நியமிப்பதும், நெருக்கடியைத் தீர்க்கவும் ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்பவும் தேவையான அவசர நடவடிக்கைகள் என்று அவர் குறிப்பிட்டார்.

"சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய வேண்டும் மற்றும் இலங்கையர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீண்ட கால திட்டத்தை ஸ்தாபிக்க வேண்டும்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி