1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

புதிய பிரதமராக நேற்று (மே 12) பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்துள்ளார்.



புதிய அமைச்சரவை நியமனம் நாளை நடைபெறாது எனவும் கோத்தா கோ கம மீது தான் கைவைக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் கொழும்பு கொள்ளுப்பிட்டி வாளுக்காராமயவில் ஆசிர்வாதம் பெறச் சென்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மிகக் குறுகிய காலத்தில் தீர்வு காணப்பட்டு மக்கள் இன்னல்களில் இருந்து விடுபடுவார்கள் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு வாளுக்காராமயவில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டு திரும்பும்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் பிரதமரிடம் பெரும்பான்மையை எவ்வாறு காண்பிப்பீர்கள் என்று கேட்டனர். பெரும்பான்மையைக் காட்ட வேண்டியபோது அது காண்பிக்கப்படும் என்று பிரதமர் பதிலளித்தார்.

பெரும்பான்மையானவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகிறார்களா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, மக்கள் துயரத்தில் இருந்து விடுபடுவதை ஊடகங்கள் விரும்பவில்லையா என்று பிரதமர் கேள்வியெழுப்பினார்.

மக்கள் தொடர்ந்தும் இந்த அழுத்தத்தில் இருப்பது ஊடகங்களின் நலனுக்கு உகந்ததா என பிரதமர் ஊடகவியலாளர்களிடம் வினவினார். குறுகிய அரசியலை இப்போது கைவிடுமாறு பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.

கோத்தா கோ கமவுக்கு என்ன நடக்கிறது என்று கேட்டதற்கு, போராட்டம் தொடர வேண்டும் என்றும், கோத்தா கோ கமவுக்கு எதுவும் செய்யப் போவதில்லை என்றும் பிரதமர் கூறினார்.

ஏதோ ஒரு வகையில் ரணில் கோ கம வந்தால் என்ன செய்வீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் பிரதமரிடம் கேட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த அவர், சில தினங்களுக்கு முன்னர் ‘ரணில் கோ ஹோம்’ என்ற கோஷத்துடன் ஒரு குழுவினர் தமது வீட்டுக்கு முன்பாகச் சென்றதாகத் தெரிவித்தார். அனைவரும் வீட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறினால் நாட்டை ஆள்வதற்கான அமைப்பை உருவாக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமருக்கு மல்வத்து - அஸ்கிரிய தேரர்களின் ஆசிகள்

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆசிர்வாதம் வழங்கியுள்ளனர்.

திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் மற்றும் வரகாகொட ஸ்ரீ ஞானரதன அஸ்கிரிய தேரர் ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ஆசீர்வதித்தனர்.

மேலும், கண்டி ஆயர் வெலன்ஸ் மென்டிஸ் அவர்களும் ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசி ஆசிர்வாதம் வழங்கியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி