1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜூன் 07 முதல் 10 ஆகிய திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.



அதற்கமைய, ஜூன் 07ஆம் திகதி அன்று பிரதமர் நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

நாட்டின் தற்போதை பொருளாதார நிலவரம் மற்றும் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு அவரது உரை அமையவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த உரையின் பின்னர் இரண்டு நாட்களுக்கு அது தொடர்பான விஷேட விவாதத்தை நடத்த சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசின் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்காக அரசாங்கம் கொண்டு வரவுள்ள 695 பில்லியன் ரூபா குiறைநிரப்பு பிரேரணை எதிர்வரும் எட்டாம் திகதி திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

அது தொடர்பில் விவாதம் நடத்தப்படவுள்ளதுடன் தேவையேற்படின் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்றுமதி, இறக்குமதி விதிமுறைகள், மின்கட்டண சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான விதிமுறைகள் என்பன எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது முன்வைக்கப்படவுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி