1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களுக்கு தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு சமுகமளிக்காவிட்டால், அவர்கள் பதவியை விட்டு வெளியேறியதாக கருதப்படுவர்.

இது குறித்து தபால் தொழிற்சங்கங்களுக்கு இன்று எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் உப தபால் நிலையங்களும் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரம் இயங்கும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 26 ஆம் திகதி முதல் தபால் ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிற்சங்க நடவடிக்கையின் விளைவாக, வெளிநாட்டுப் பிரிவில் ஏராளமான பொதிகள் குவிந்து கிடப்பதாகவும், இதனால் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை மற்றும் தபால் திணைக்களத்திற்கு 20 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்ள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி