1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சில அமைப்புக்களின் தலைவர்கள், புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தை உள்ளிட்ட சில பகுதிகளுக்குள் இன்று(07) பிரவேசிக்க தடை விதித்து, கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த அமைப்புக்களின் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் ஒல்கொட் மாவத்தை, போதிருகாராம மாவத்தையிலுள்ள விகாரைக்கு முன்பாக கூடாரங்களை அமைத்து தொடர்ச்சியாக தங்குவதற்கு திட்டமிட்டுள்ள காரணத்தினால், மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் கூடும் என தெரிவித்து அதனை தடுப்பதற்கு உத்தரவிடக் கோரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னர் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுரகிமு ஸ்ரீலங்கா தேசிய திட்டத்தின் ஏற்பாட்டாளர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர், ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட சில தேரர்களுக்கு எதிராக இந்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

அதற்கமைய, புறக்கோட்டை பொலிஸ் பிரிவில் ஒல்கொட் மாவத்தை உள்ளிட்ட சில பகுதிகளுக்குள் பிரவேசித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தங்கியிருப்பதற்கு இவர்களுக்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி