1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நியமிக்க பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனைத்து நிறுவன தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளாந்தம் கொழும்பு அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையை வெற்றிகரமாக சமாளிக்கும் வகையில் மூன்று மாத காலத்திற்கு முகாமைத்துவ சேவை அதிகாரிகளை தற்காலிக அடிப்படையில் நியமிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய பத்தரமுல்லை குடிவரவு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்திலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் வசிக்கும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் உத்தியோகத்தர்களை மூன்று மாத காலத்திற்கு குடிவரவு திணைக்களத்திற்கு நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பகல் மற்றும் இரவு என இரண்டு நேர அட்டவணை முறையில் பணியாற்ற விரும்பும் உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனைத்து நிறுவன தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அவசரத் தேவையாகக் கருதி முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் கூட்டுச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி