1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதியில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.



இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் தற்போது கிடைத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் மற்றும் வேலைத்திட்டம் ஒன்றை வழங்குவதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட குழு இன்று (04) காலை கூடியது.

பல்வேறு அபிவிருத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் மின்சாரத்துறையின் பங்குதாரர்களுடன் குழு கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எதிர்வரும் வாரத்தில் மின்சார சபை, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுடன் கலந்துரையாடப்பட உள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி