1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை வகிக்கும் இரட்டைப் பிரஜைகள் யார் என்பதைக் கண்டறிய

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை குடிவரவு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

சபாநாயகரின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று கடந்த சில நாட்களாக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமை தொடர்பாக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணையில் தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்த மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு இரட்டைக் குடியுரிமை உண்டு என்பதை குடிவரவுத் திணைக்களம் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த விசாரணையில் அந்தந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் கடவுச்சீட்டு பெறும் போது வழங்கிய தகவல்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் வேறு நாட்டின் குடியுரிமை உள்ளவரா என்ற தகவல்களை உறுதிப்படுத்த முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் இந்த நாட்டில் கடவுச்சீட்டு பெறும் போது அதனை மறைப்பதற்கு அடிக்கடி தூண்டப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

இரட்டைக் குடியுரிமையை மறைத்து அல்லது அறிவிப்பதைத் தவிர்த்தால் அதை மீண்டும் விசாரிக்கும் அமைப்பு அமைப்பில் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி