1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காக

பொலிஸ் விசேட படையணியொன்றை உருவாக்குவதற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அவதானம் செலுத்தியுள்ளார்.

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு மேலதிகமாக குருநாகல் மற்றும் அநுராதபுரம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களிடையேயும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என்று, கொழும்பில் நேற்று (01) ஊடகச் சந்திப்பொன்றை நடத்திய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.

அதனால், ஏனைய அனைத்துப் பணிகளிலிருந்தம் விசேட பொலிஸ் படையணியை விடுவித்து, போதைப்பொருள் மற்றும் ஒருங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் பொறுப்பை மாத்திரம் கையளிக்க எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வருடாந்தம் இலங்கையில் கைப்பற்றப்படும் ஹெரோயின் போதைப்பொருளின் அளவு 1,100 முதல் 2,000 கிலோகிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தவிர, ஏனைய வகை போதைப்பொருட்களையும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்யும் வேலைத்திட்டமொன்றும் திட்டமிடப்பட்ட வகையில் குற்றவாளிகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில், விசேட அதிரடிப்படையினருடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்ட அவர், அதற்கான ஆலோசனைகளும் அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

அத்துடன், கலைஞர்கள் மற்றும் இளம் சமுதாயத்தினருடன் ஒன்றிணைந்து, போதைப்பொருள் ஒழிப்புக்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி