1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அமெரிக்காவின் டெக்சாஸில் வசித்து வந்த இலங்கை பின்னணியுடைய ஒருவர் பொலிஸாரால்

சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் முழுமையான விசாரணையையும் நீதியையும் எதிர்பார்ப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் அவர் தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வீட்டுக்குள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, அவர் வைத்திருந்த துப்பாக்கியை கைவிட போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை என்று அவரது குடும்பம் NBC செய்தியிடம் கூறியது.

33 வயதான ராஜன் அல்லது ராஜ் முனசிங்க என்பவரே கொல்லப்பட்டார்.

நவம்பர் 15 அதிகாலையில் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தார். தனது வீட்டில் திருடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தார். வீட்டுக்குள் திருடர்கள் இருக்கலாமென்ற சந்தேகத்தில் அவர் தனது முன் கதவுக்கு வெளியே துப்பாக்கியை வைத்திருந்தார், அப்போது ஒஸ்டின் காவல்துறை அதிகாரி ஒருவர் அவரை எதிர்கொண்டார். துப்பாக்கியை கைவிடுமாறு முனசிங்கவிடம் கட்டளையிட்டபடி பொலிஸார் அவரை சுட்டுக் கொன்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இரண்டும் நடந்ததாகவும் அவருக்கு அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

வியாழனன்று ஒரு பிரத்தியேக நேர்காணலில் கருத்துத் தெரிவித்திருந்த முனசிங்கவின் தாயார் ரூத் மற்றும் சகோதரர் ஜோஹான், தாங்கள் மனம் உடைந்து போயிருப்பதாகவும் ஆயுதத்தை கைவிடுவதற்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்படுவதற்கு முன்னர் தங்கள் அன்புக்குரியவர் ஏன் இவ்வளவு விரைவாக கொல்லப்பட்டார் என்பதற்கான பதில்களை ஒஸ்டின் பொலிஸாரிடம் கோருவதாகவும் கூறினார்.

“அவர் எந்த தவறும் செய்யவில்லை,” என்று ஜோஹான் முனசிங்க கூறினார். “அவரிடம் துப்பாக்கி இருந்தது … அவர் தனது வீட்டைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார், அவர் துப்பாக்கியை சுட்டிக்காட்டவில்லை. அவர் மிரட்டவில்லை. அவர் யாரையும் சுடப் போவது போல் தெரியவில்லை. தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தனது சகோதரருக்கு துப்பாக்கி கிடைத்துள்ளதாகவும் அப்பகுதியில் அண்மைக்காலமாக குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன” என்றும் முனசிங்க தெரிவித்தார்.

நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு நடந்ததாக ஒஸ்டின் பொலிஸா ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.

சாம்பல் நிற அங்கி மற்றும் கருப்பு காற்சட்டை அணிந்த ஒரு நபர் தெருவில் துப்பாக்கியையுடன் நின்றதாக அவசர இலக்கமான 911 க்கு யாரோ ஒருவர் தகவல் கொடுத்துள்ளார்.

அந்த நபர் தனது துப்பாக்கியை தனது வீட்டின் உட்புறத்தை நோக்கி நீட்டிக் கொண்டிருந்ததாகவும் பின்னர் தனது சொந்த வீட்டுக்குள் நுழைந்து இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அழைப்பாளர் கூறினார். பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்ததாகவும் அந்த நபர் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அழைப்பாளர் கூறினார்.

தனது வீட்டுக்குள் திருடன் நுழைந்த சந்தேகத்திலேயே ராஜ் முனசிங்க அவ்வாறு நடந்து கொண்டார் என கருத முடிகிறது. முனசிங்க மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி டேனியல் சான்செஸ் என அடையாளம் காணப்பட்டார், அவர் தற்போது நிர்வாக விடுமுறையில் உள்ளார்.

“அதிகாரி சான்செஸ் முன்சிங்கவை முதலில் அவதானித்து துப்பாக்கியை கைவிடுமாறு வாய்மொழியாக கட்டளையிட்டார். முனசிங்கவிடம் துப்பாக்கியை கைவிடச் சொன்ன உடனேயே, அதிகாரி சான்செஸ், தனது திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட துப்பாக்கியால் முனசிங்க மீது சுட்டார். முனசிங்க தாக்கப்பட்டு தரையில் விழுந்தார்” என பொலிஸார் தெரிவித்தனர்.

“அதிகாரிகள் உடனடியாக உயிர்காக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினர்,” என்று போலீசார் தெரிவித்தனர். முன்சிங்க உள்ளூர் வைத்தியசாலையில் உயிரிழந்தார்” எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடந்ததும் உயிர்காக்கும் நடவடிக்கைக்கு பொலிஸார் ஓடிச்சென்றது, பொலிஸாரின் உடல் கமராவில் பதிவாகியுள்ளது. சான்செஸ் இரண்டு வருடங்கள் ஒன்பது மாதங்களாக திணைக்களத்தில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு தொடர்பாக இரண்டு விசாரணைகள் நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஒன்று டிராவிஸ் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து திணைக்களத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் குற்றவியல் விசாரணை. இரண்டாவது, பொலிஸ் மேற்பார்வை அலுவலகத்தின் மேற்பார்வையுடன், திணைக்களத்தின் உள் விவகாரப் பிரிவினால் நடத்தப்படும் நிர்வாக விசாரணையாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி