1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஏற்பட்ட 'மண்டௌஸ்' சூறாவளியின் தாக்கத்தினால்,

இந்தியாவில் இருந்து தூசித் துகள்கள் அதிகளவில் வந்து, இலங்கை வளிமண்டலம் மாசடைந்துள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் இருண்ட இயற்கை மற்றும் பனிமூட்டமான இயல்புக்கு இதுவே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மற்றும் கொழும்பு போன்ற மாவட்டங்கள் இந்நிலைமை அதிகரித்துள்ளதுடன், வளிமண்டல அளவீட்டுத் தரவுகளின்படி, கம்பஹா மாவட்டத்தில் வளிமண்டலத் துகள்களின் அளவு 200 அலகுகளாகவும் கொழும்பு மாவட்டத்தில் துகள்களின் அளவு 167 அலகுகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த நாட்டைப் பாதித்துள்ள புயல், நாளைய (9) தினத்துக்குள் இந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளின் கரைகளைக் கடக்க உள்ளதாகவும் அதன் பின்னர் புழுதி நிலை படிப்படியாகக் குறைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்களில் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம் என்றும் இந்த தூசித் துகள்கள் உடலுக்குள் சென்று சுவாச நோய்களை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை முடிந்தவரை மூடி வைப்பதும் முக்கியம் எனவும் வெளியில் செல்வதை முடிந்தளவு குறைத்துக்கொள்ள  வேண்டும் எனவும் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி