1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டின்

பெரும்பாலான நகர்ப்புறங்களில் சாதாரண காற்றோட்டம் இருப்பதாகக் காட்டுகிறது.

எவ்வாறாயினும், அமெரிக்க காற்றுத் தரச் சுட்டெண்ணின் படி, 03 பிரதேசங்களில் 150க்கும் அதிகமான காற்று நிலை இன்னமும் காணப்படுவதாக அந்த அமைப்பின் சுற்றாடல் திணைக்களப் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பின் பெறுமதி 191, புத்தளத்தின் பெறுமதி 169, கேகாலையின் பெறுமதி 155ஆகக் காணப்படுகிறது.

ஏனைய பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் குருநாகல் 106, கண்டி 126, எம்பிலிப்பிட்டிய 131, களுத்துறை 146, இரத்தினபுரி 114 என பதிவாகியுள்ளது. சர்வதேச தரவுகளின்படி, 101 மற்றும் 200 க்கு இடையிலான மதிப்பு வளிமண்டலத்தில் மோசமான நிலைமையாகக் கருதப்படுகிறது.

திருகோணமலை 43, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் 46, வவுனியா 49, பொலன்னறுவை 54, யாழ்ப்பாணம் 63 என இன்று காலை வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர நுவரெலியாவில் 51, ஹம்பாந்தோட்டையில் 94 மற்றும் காலியில் 97 உள்ளன. எனினும், திருகோணமலை 43, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் 46, வவுனியா 49, பொலன்னறுவை 54, யாழ்ப்பாணம் 63 என இன்று காலை வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நுவரெலியாவில் 51, ஹம்பாந்தோட்டையில் 94 மற்றும் காலியில் 97 உள்ளன.

வளி மாசடைவு சாதாரண மட்டத்தில் காணப்படுவதால் இன்று பாதகமான சுகாதார நிலைமை இல்லை என தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். அந்த நிலை அடுத்த சில நாட்களில் தொடரும் என அந்த அமைப்பு எதிர்பார்க்கிறது.

இந்தியா உள்ளிட்ட இலங்கைக்கு அண்மித்த நாடுகளின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டின் தாக்கம் தீவை பாதிப்பதாக கடந்த வியாழக்கிழமை தெரியவந்துள்ளது. அதன்படி, அன்றிரவு தீவின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவியது.

தற்போதுள்ள நிலைமைகளை கருத்திற் கொண்டு நேற்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், நேற்றைய தினத்தை விட நாட்டின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாடு குறைந்துள்ளது.

இதன்படி, இன்று முதல் வளி மாசு நிலை வழமையாக இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி