1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பல பகுதிகளில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக, சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் பல நோய்களுக்கு உள்ளாகுவதாகவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைநல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, கடும் குளிரில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பில் குழந்தை நல மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா விளக்கியுள்ளார்.

"குழந்தைகளுக்கு குளிர் அதிகமாக இருக்கும் போது பல நோய்கள் வரலாம். குறிப்பாக சளியால் குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாகும். அதனால், இந்த நாட்களில் குழந்தைகள் வெளியே சென்றால், நன்றாக உடை அணிந்து, தொப்பி போட்டு, இரண்டு காலுறைகளை அணியுங்கள். இல்லையெனில், சளி ஆரம்பித்தால், காய்ச்சல் எளிதில் பரவும்.

"தூசி நிறைந்த இடத்தில் இருந்தால், முகக்கவசத்தை தொடர்ந்து பயன்படுத்துங்கள். எடை குறைந்த மற்றும் குறைமாத குழந்தைகளுக்கு இந்த குளிர் அவ்வளவு நல்லதல்ல. அத்தகைய குழந்தைகளுக்கு, நன்றாக உடுத்தி, தொப்பி மற்றும் இரண்டு காலுறைகளை அணிவியுங்கள்.

“இரண்டு கைகளிலும் இரண்டு சொக்ஸ் போட்டு போர்த்தி விடுங்கள். குழந்தைகளின் உடல் வெப்பநிலை குறையும் போது நோய்வாய்ப்படலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையை பாதித்துள்ள அதிக குளிருடனான வானிலையினால் கந்தளாய் பிரதேசத்தில் இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் – ராஜாஎல பகுதியைச் சேர்ந்த இரண்டரை மாத குழந்தையும், கந்தளாய் – பேராறு பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த இரண்டு குழந்தைகளும் (09) அதிகாலை உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் ஒருவர் நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடும் குளிரின் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு, மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த நாட்களில் நிலவும் கடும் குளிரான வானிலை காரணமாக சிறு பிள்ளைகளுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் ஏனைய நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே, கடும் குளிரில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பெற்றோர்களிடம் விசேட மருத்துவர் கேட்டுக்கொண்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி