1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வடக்கு மாகாணத்தில் காலநிலை மாற்றத்தால் இறந்த கால்நடைகளை உரிய முறையில் அடக்கம்

செய்வதனை உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

'அண்மைய நாட்களில் வெப்பநிலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத கால்நடைகள் இறந்துள்ளன

இறந்த கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்வதை உறுதிப்படுத்துமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஆகவே, எதிர்காலத்தில் இவ்வாறான காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் கால்நடை வளர்ப்பார்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் மற்றும் ஆடுகளின் மரணத்தை கருத்திற்கொண்டு, இறைச்சி பரிசோதனைகளை அதிகரிக்க இலங்கை பொதுச் சுகாதாரக் பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, ​​பல பகுதிகளில் முறையான அனுமதியின்றி மாட்டிறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றார்.

இதனால், அங்கீகரிக்கப்பட்ட முத்திரையுடன் கூடிய இறைச்சியை மாத்திரமே நுகர்வோர் கொள்வனவு செய்ய வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி