1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர், மக்கள் நெரிசல் மிகுந்த கொழும்பில் கொல்லப்பட்டு இன்றுடன் ஐந்து நாட்கள் ஆகின்றன.

இந்தக் குற்றச்செயல் இன்னும் மர்மமாகவே உள்ளது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பல வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. வாக்குமூலம் எடுத்தவர்களில் ஷாப்டரின் மனைவி டானி ஷாப்டரும் அடங்குகிறார்.

மனைவி விடுத்த அறிவித்தலின் பிரகாரம் பொரளை மயானத்துக்குச் சென்ற நிறைவேற்று அதிகாரி கிரிஷ் பெரேராவிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,

“24 மணி நேரத்துக்குள் நீண்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல கோணங்களில் விசாரணைகள் நடக்கின்றன. பல கோணங்களில் நாங்கள் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறோம். நாங்கள் யாரையும் சந்தேகிக்கவில்லை. எந்த சிறப்பு சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு, குற்றங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

மயானத்துக்குச் செல்ல முன் எங்கு சென்றார்?

இதுவரை நடந்த விசாரணைகளின்படி, தினேஷ் ஷாஃப்டர் கொல்லப்பட்ட போது நடந்த நிகழ்வுகளின் வரிசை தெரியவந்துள்ளது. இந்தக் குற்றச்செயல் இடம்பெற்ற தினத்தன்று, கொழும்பு மலர் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து பிற்பகல் 1.55 மணியளவில் அவர் வெளியேறியுள்ளார்.

“இதனிடையே, மலலசேகர மாவத்தையில் உள்ள உணவகம் ஒன்றக்கு  சென்றுள்ள ஷாப்டர், அங்கு  சிற்றுண்டிக் கொள்வனவில் ஈடுபட்டுள்ளார் என்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“மதியம் 2.15 மணியளவில், அவரது மனைவியான டானி ஷாப்டர், “இப்போது திரும்பி வருவீர்களா?” என்று தனது கணவரின் தொலைபேசிக்கு வட்ஸ்அப் செய்தி அனுப்பியுள்ளார்.

தினேஷ் ஷாஃப்டரிடமிருந்து ஒரு WhatsApp செய்தி

இதற்கிடையில், மதியம் 2.42 மணிக்கு தினேஷ் ஷாஃப்டரிடமிருந்து தனக்கு வட்ஸ்அப் செய்தி வந்ததாக பிரையன் தோமஸ் தெரிவித்தார். “நீங்கள் வரும் வரை காத்திருக்கிறேன்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது என்று பிரையன் தோமஸ் தெரிவித்திருக்கிறார்.

அதற்கு பதிலளித்துள்ள தோமஸ், "நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை. உங்களைச் சந்திக்க எனக்கு எந்தக் காரணமும் இல்லை, டிசெம்பர் 24 அன்று நீங்கள் என்னை என்ன செய்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அறிவிக்கப்பட்டது.

மதியம் 2.43 மணியளவில், "நீங்கள் கூறியது போல் நான் அனைத்துக் குறுஞ்செய்திகளையும் நீக்கிவிட்டேன்" என்று,  மற்றொரு வட்ஸ்அப் செய்தியை ஷாஃப்டர் தனக்கு அனுப்பியதாக தோமஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

பதிலுக்கு, பிரையன் தோமஸ் அனுப்பிய வட்ஸ்அப் குறுஞ்செய்தியில், “நான் எப்பொழுது அந்தச் செய்தியை நீக்கச் சொன்னேன்?” என்று கேட்டிருந்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கூற்றுப்படி, பிற்பகல் 2.45 மணியளவில் தினேஷ் ஷாப்டர் பொரளை பொது மயானத்துக்குள் நுழைந்துள்ளார்.

தினேஷ் ஷாப்டரின் அலைபேசியிலிருந்து தனக்கு வேறொரு நபரே குறுஞ்செய்திகளை அனுப்பியிருக்கலாம் எனத் தான் சந்தேகிப்பதாக பிரையன் தோமஸ் கூறுகிறார். ஒரு காலத்தில் தனது நெருங்கிய நண்பராக இருந்த ஷாப்டரின் ஆங்கில மொழிக் கையாளுகை தொடர்பில்  தனக்கு நல்ல புரிதல் இருப்பதாகவும் அதைவிட மாறுபட்ட விதத்திலேயே இறுதி குறுஞ்செய்திகள் அமைந்திருந்ததாகவும் பிரையன் தோமஸ் தெரிவித்துள்ளார்.

சுயநினைவின்றி இருந்ததாகக் கூறப்படும் தினேஷ் ஷாஃப்டரை மாலை 3.30 மணியளவில் கிரிஸ் பெரேரா சந்தித்துள்ளார். பிற்பகல் 3.55 மணியளவில் ஷாப்டரை தனது சொந்தக் காரில் அழைத்துச் சென்நே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அதுவரை, தினேஷ் ஷாஃப்டரின் நிலை என்ன என்பது குறித்து பொலிஸாருக்கோ டானி ஷாப்டருக்கோ தெரியப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

மக்கள் நெரிசல் மிகுந்த கொழும்பில் உள்ள பொரளை பொது மயானத்தில் 6 பேரின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இந்த பிரபல வர்த்தகர் கொல்லப்பட்டிருக்க முடியுமா? அல்லது வேறு இடத்தில் மயக்கமடைந்து பொது மயானத்துக்கு கொண்டு வரப்பட்டாரா?

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ பதிலளிக்கையில், “அவர் ஒரு தொழிலதிபர் மற்றும் நிறைய தொடர்புகள் கொண்டவர். மேலும், இந்தக் கொலையில் சில மர்மங்கள் உள்ளன. திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் கொலைகள் தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள், பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் விசாரிக்கின்றனர். பல குழுக்கள் மற்றும் இதற்காக புலனாய்வு தர அதிகாரி தலைமையில் சிறிய குழு ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதேவேளை, பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நான்கு தொலைபேசிகளின் பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல பொரளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொரளை பொலிஸார் நேற்று செவ்வாய்கிழமை விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னரே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட தினேஸ் ஷாப்டரின் மனைவி மற்றும் அவரது நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக பொரளை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை தெரிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இதேவேளை, பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டர், பொரளை மயானத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரது நெருங்கிய உறவினர் ஒருவரின் திட்டத்திற்கமைய கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி