1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உள்ளூராட்சிமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்கள் நியமனம் தொடர்பான

வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 4 (1)ஆவது பிரிவின்படி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் 10 பில்லியன் ரூபாய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தலை நடத்துவதற்காக மொத்தமாக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தினால் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அது நாடாளுமன்றத்தினால் அங்கிகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி