1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாளாந்த அரிசி நுகர்வு குறைந்ததாலும், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை சந்தையில் குறைந்ததாலும் உள்நாட்டு அரிசிக்கான தேவை குறைந்துள்ளது.

இதன்காரணமாக, நடுத்தர அளவிலான ஆலை உரிமையாளர்கள் தங்களது கிடங்குகளில் அரிசியை பயிரிட்டு அல்லது அரசு கால்நடை தீவனத்திற்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை கால்நடை தீவனமாக வழங்குவதைத் தடை செய்து சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இவ்வாறான நிலையில் ஒரு கிலோ அரிசி நூற்று நாற்பது ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த சில வாரங்களில் மட்டும் இருபத்தைந்து இலட்சம் கிலோகிராம் அரிசி வடமேற்கு மாகாணத்தில் உள்ள கால்நடை பண்ணைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நாளாந்த அரிசி நுகர்வு சுமார் அறுபத்தைந்து இலட்சம் கிலோவாக இருந்த நிலையில் அது சுமார் பத்து இலட்சம் கிலோ வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வகையில் பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலையில் இருந்து கால்நடை தீவனத்திற்காக இருபது தொன் அரிசியை குளியாப்பிட்டிய பகுதியிலுள்ள கால்நடை பண்ணைக்கு ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை மின்னேரிய பொலிஸார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

மேலும், அந்தப் பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் மனித பாவனைக்கு ஏற்ற சுமார் 140 மெற்றிக் தொன் அரிசி கால்நடைத் தீவனத்திற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நுகர்வோர் சேவை அதிகார சபைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிடங்கின் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

கம்பஹா மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் விசாரணைப் பிரிவினரால் மனித பாவனைக்கு ஏற்ற 21 மெற்றிக் தொன் அரிசியை கைப்பற்றியுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர அழைப்பு பிரிவு இலக்கம் 1977க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

நுகர்வோர் அதிகாரசபையானது கடையின் காப்பாளர், முகாமையாளர் மற்றும் லொறி சாரதி ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பெற்று சந்தேக நபர்களை கைது செய்து 2023 ஜனவரி 06ஆம் திகதி வத்தளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு உட்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக நுகர்வோர் அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட தலைவர் ரஞ்சித் வீரவர்தன தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி