1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றால் நாளாந்த மின்வெட்டை மக்கள் எதிர்நோக்க வேண்டும் என அமைச்சர்

கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் 05, 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் 03 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கான புதிய நிலக்கரி விநியோகத்துக்கான டெண்டர் சட்ட மா அதிபரின் பரிந்துரைகளைப் பெற்றதன் பின்னர் இந்தோனேசிய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு நிதியுதவி

எதிர்வரும் ஜனவரி மாதம் 05, 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் 03 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும், எதிர்வரும் மாதத்தில் 07 நிலக்கரி கப்பல்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பருவகால நிலக்கரி கப்பல்களை கொள்வனவு செய்ததில் எஞ்சியிருந்த கப்பல்களில் இருந்து இந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்படும் என எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அடுத்த ஆண்டு தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் என்றும், கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், நாட்டு மக்கள் வாழ்க்கை முறைக்கு மாற்றியமைக்க வேண்டும் என்றும் மின்சார அமைச்சர் குறிப்பிட்டார்.

தினமும் பல மணிநேர மின்வெட்டு

மின் பொறியாளர்கள் சொல்வது போல் அடுத்த வருடம் 8 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுமா என்று செய்தியாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், மின்கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் அந்த பொறியாளர்களின் விருப்பம் நிறைவேறும் என்றார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட நட்டத்தை மீட்பதற்காக அல்ல என தெரிவித்த அமைச்சர், 2023ஆம் ஆண்டு மின் உற்பத்திக்கான செலவை ஈடுசெய்வதற்காகவே இந்த மின்கட்டணத்தை உயர்த்துவதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மின் கட்டண திருத்தத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி நிதியுதவி வழங்குவதற்கு உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொடர்பில் வழங்கப்படக்கூடிய சலுகைகள் தொடர்பில் உரிய பொறுப்பு வாய்ந்த திணைக்களங்களுடன் கலந்துரையாடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம்

மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் ரொஹான் செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பாக இலங்கை மின்சார சபையால் மாத்திரம் தீர்மானிக்க முடியாது எனவும் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கட்டண அதிகரிப்பு குறித்த கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி