1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

2022ஆம் ஆண்டின் அமெரிக்க டொலருக்கு நிகரான அதிக தேய்மானத்தை கொண்ட நாணய பட்டியலில் இலங்கை ரூபாய்

4ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே கருத்துப்படி, இலங்கை ரூபாவின் பெறுமதி 49.17 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க டொலருக்கு நிகரான பெறுமதி வீழ்ச்சியில் சிம்பாப்வேயின் நாணய அலகான டொலர் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, சிம்பாப்வே டொலரின் பெறுமதி, அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 77.78 சதவீமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

வெனிசூலாவின் பொலிவர் மற்றும் கியூபாவின் பெசோ ஆகிய நாணயங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி