1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் கடன் பெறுவதற்கான உடன்படிக்கையை

எட்ட முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் கடன் பெறுவதற்கான அனுமதி கிடைத்தவுடன் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இலங்கையுடனான பணியாளர் மட்ட உடன்படிக்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது.

“சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை விட, இலங்கை மீண்டுமொருமுறை ஏனைய கடன் வழங்குனர்களின் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் முக்கியமானது.

“நிதி உதவிக்கான நிறைவேற்று சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த டிசம்பர் காலக்கெடுவிற்குள் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் தவறியிருந்தது.“

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கடனை பெறுவதற்கு தேவையான செயன்முறைகளை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் கடுமையாக உழைத்து வருகின்றது.

“இதனிடையே சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தாமதமடைவதற்கு சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சு இழுத்தடிப்பு மாத்திரம் காரணம் அல்லவென பேச்சுவார்த்தையுடன் தொடர்புடைய அதிகாரியொருவர் கூறியிருந்தார்.

“இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாகப் பலர் கூறியுள்ள போதிலும், எந்தவொரு இருதரப்பு கடன் வழங்குநர்களும் இதுவரை முறைப்படியோ அல்லது எழுத்துபூர்வமாகவோ கடன் மறுசீரமைப்பு குறித்து எந்த உறுதிப்படுத்தலையும் வழங்கவில்லை” என்றார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி