1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தற்போதைய காலத்தின் தேவையை உணர்ந்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை

எடுக்கவேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பரந்துபட்ட அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா ஆகியோருக்கு ரெலோ மற்றும் புளொட் தலைவர்களால் கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்துக்கு முன்னதாக இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்படும் என்று நம்பகரமாகத் தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிர்வாக ரீதியாக வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்தக் கடிதத்தில் முன்வைக்கப்பட்டவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான பொதுச் சின்னம் மற்றும் கட்சிப் பதிவு தொடர்பிலும் சுட்டிக்காட்டப்படவுள்ளது.

மேலும், தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஓரணியாகக் கூட்டமைப்பை விரிவுபடுத்தி பயணிக்க வேண்டும் என்றும், அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிய கடிதம், ரணில் அரசின் சர்வகட்சிக் கூட்டத்தில் நிலைப்பாடு எடுக்கும் விவகாரம் என அனைத்து விடயங்களிலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமையாகச் செயற்பட்டுள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து ஒன்றித்து - ஓரணியாக - ஒரே கூட்டமைப்பாகக் கொண்டு செல்ல வேண்டியதன் தேவைப்பாடு குறித்தும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்படவுள்ளது.

மேலும் உருவாக்கப்படும் கூட்டு தனித்துத் தேர்தலுக்காக மாத்திரம் இல்லாமல் தொடர்ந்தும் அது அவ்வாறானச் செயற்பட வேண்டும் என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி