1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, லங்கா ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவினாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிலோன் ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 405 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 355 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீசல் விலையை 15 ரூபாவினாலும் மண்ணெண்ணெய்யின் விலையை 10 ரூபாவினாலும் குறைக்க லங்கா ஐஓசி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, டீசலின் விலை குறைக்கப்பட்டாலும், பஸ் கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியம் இல்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் லங்கா ஒட்டோ டீசல் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை பஸ் கட்டணம் குறைக்கப்பட வேண்டுமாயின் டீசலின் விலை 04 வீதத்தால் குறைக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி