1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது

நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இரு பிரிவுகளாக இரண்டு தடவைகள் இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று மாலை 5 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. விளக்கேற்றி, நினைவுத் தூபிக்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தலில் த.தே.ம.முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி, பொன் மாஸ்டர், கட்சியின் பத்திராதிபர் ஈழத்தமிழ்மணி மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.

இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதுட்டுமன்றி தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. 10.01.1974 அன்று தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டோர் விபரம்:

வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15 – மாணவன்)

பரம்சோதி சரவணபவன் (வயது 26)

வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32)

ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52 – ஆசிரியர்)

Jaffna-2023_1.jpg

Jaffna-2023_3.jpg

Jaffna-2023_4.jpg

xzcsdft4.jpg

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி