1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையிலேயே கடந்த ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய சேதன உரம் வட்டம் புழு எனப்படும் நிமற்றோடாக் பரவியுள்ளதுடன்

அரசாங்கம் உண்மையான பிரச்சினையை வெளியே விட அச்சப்படுவதாகவும் இந்த நிலைமையானது கொரோனாவை விட இது பாரிய தாக்கத்தை இலங்கையில் ஏற்படுத்தப்போவதாகவும் கமநல அமைப்புக்களின் மட்டக்களப்பு மாவட்ட அதிகார சபை தலைவர் அ.ரமேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கமநல அதிகார சபையின் அமைப்பினர் இன்று மட்டு. ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அண்மைக்காலமாக விவசாயிகள் மிகப்பெரிய பிரச்சினை ஒன்றை எதிர்நோக்கு கொண்டிருக்கின்றோம்.இலங்கையிலேயே கடந்த ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய சேதன உரம் வட்டம் புழு எனப்படும் நிமற்றோடாக் பரவியுள்ளது. அரசாங்கம் உண்மையான பிரச்சினையை வெளியே விட பயப்படுகினன்றனர்.

அண்மைக்காலமாக இந்த சேதன உரம் பாவித்ததால் ஏற்பட்டுள்ள இந்த வட்டப்புழு நோய் வேளான்மையின் வேரிலே முடிச்சுகளை ஏற்படுத்துவதால் அந்த வேரூடாக உறிஞ்சப்படும் நீர் அல்லது போசனைகளோ உரிஞ்சாத தன் காரணமாக அந்த வெள்ளாமை மஞ்சள் நிறமாகி கபில புள்ளிகள் ஏற்படுகின்றது. இது பொட்டாசியம்,பொஸ்பரஸ் குறைபாடு என்று கூறப்படுகின்றது. இதுஏற்றுக்கொள்ளக்கூடிய யாதார்த்தமான விடயம்.இருந்தாலும் மண்ணில் உள்ள பொட்டாசியம்,பொஸ்பரஸை உரிஞ்சுவதற்கு கூட இந்த வட்டப்புழு இடையூறாகவுள்ளது.இது உண்மையில் அண்மையிலே வந்த கொரோனாவை விட இது பாரிய தாக்கத்தை இலங்கையில் ஏற்படுத்தப் போகின்றது.

இதனைக்கட்டுப்படுத்துவதாகயிருந்தால் விவசாயிகள் சிறந்த பயிற்சிகளைப்பெற்றிருக்கவேண்டும். இது நீரில்,விவசாயிகளின் கால்களினால்,உழவு இயந்திரம்,அறுவடையிந்திரம் உட்பட பல வழிகளில் பரவும் நிலையுள்ளது.

இந்த கிருமியானது நீர் உள்ளநேரம் மேலுக்கு வந்து தாக்கும் நீர் இல்லாத நேரம் நிலத்திற்கு அடியில் சென்றுவிடும்.

இந்த வேளான்மையினை எரிக்கவேண்டிய நிலை ஏற்படும் அல்லது நஞ்சுக்குருனல் பாவிக்கவேண்டிய நிலையுள்ளது.இதனை கட்டுப்படுத்த மூன்று போகங்கள் செல்லவேண்டிய நிலையேற்படும். அத்துடன் இந்த நோயை கட்டுப்படுத்த.. 65,000 ரூபா பணத்திற்கு மேல் செலவழிக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இது தொடர்பில் ஆய்வுக்காக வந்தவர்கள் இதனைக்கண்டு அச்சங்கொண்டார்கள். இதனை பெரும் பிரச்சினையென கூறியவர்கள் தற்போது அவர்களின் வாய்கள் அடைக்கப்படுகின்றன.விவசாய அமைச்சினால் அதிகாரிகள் எந்த ஊடகங்களுக்கும் கருத்து தெரிவிக்கவேண்டாம் என அவசரமாக இன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தாக்கம் கடந்த ஆட்சியாளர்களின் சேதனப்பசளையின் மூலமே உருவாகியுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று இதனை மஞ்சள் நோய் என்ற போர்வையில் 25 மாவட்டங்களிலும் மஞ்சள் நோய் என்ற கருத்தை அரசு தெரிவித்து வருகின்றது, நாம் இதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இதனால் 12 13 நெலல்மூடைகள்தான் ஏக்கருக்கு பெறப் போகின்றோம். பாதிப்பு ஏற்பட்டால் அதற்குரிய நட்ட ஈட்டை தர வேண்டும், காணிகளை பழைய நிலைக்கு மாற்றுவதற்குரிய செலவுகளையும் அரசாங்கம் பாரம் எடுக்க வேண்டும்.

அரசாங்கம் மாறினாலும் கடந்த காலத்தில் கோத்தாபாய ராஜபக்சவாக இருக்கலாம் மகிந்திர ராஜபக்சவாக இருக்கலாம், தற்போதுள்ள ஜனாதிபதியாக இருக்கலாம் அவர்கள் அவங்கட கொள்கையில் சரியாக உள்ளனர், அவர்கள் அவர்களுடைய விடயத்தில் சரியாக உள்ளனர் கோழித்தீன் முட்டை அரிசி இறக்குமதி போன்ற விடயங்களில் இனி சரியாக இருக்க வேண்டும் ஆட்சியாளர்கள் திட்டமிடல் வேண்டும். அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்க எமது பணத்தில் இருந்து 14 பில்லியன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்று நெல் வாங்க வழியில்லாமல் உள்ளது.

இதேபோன்று இங்கு கருத்து தெரிவித்த கமநல அமைப்புக்களின் மட்டக்களப்பு மாவட்ட அதிகார சபை உறுப்பினர் என்.மகேந்திரன், 'சீனா இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அரிசிகளை இறக்கி இந்த நாட்டை சீரழிக்காமல் மீண்டும் மீண்டும் இதை எச்சரிக்கையாக விடுகிறோம் விவசாயிகள் சார்பில் இருந்து அரசுக்கு தொடர்ந்து எமது விவசாயிகளுக்கு படு பாதாளத்தினுள் தள்ளாமல் அப்படி செய்து இந்த அரசாங்கத்தை நடத்தலாம் என பகல் கனவு காண வேண்டாம் என்று இந்த அரசாங்கத்திற்கு சொல்கிறோம்.

'தற்பொழுது உள்ளூராட்சி தேர்தலும் ஆரம்பமாகியுள்ளது இதிலே விவசாயிகள் பாரிய ஒரு மனக் குறையுடன் உள்ளார்கள் தேர்தலில் வாக்களிப்பார்களோ வாக்களிக்காமல் விடுவார்களோ தெரியவில்லை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபாய் ராஜபக்ஷர் ஆகியோருடன் இணைந்து தற்போது ஜனாதிபதி தனது ஆட்சி அதிகாரங்களை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார் அவர் செய்த வேலையைத்தான் இவர் செய்வாரோ எங்களுக்கு புரியவில்லை, உடனடியாக இந்த வேலைகளை விட்டு விட்டு விவசாயிகளை பாதுகாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி