1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பௌத்த மதத்திற்கு மட்டும் முன்னுரிமை

வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளின் போது சிங்கள பௌத்த முறைமைகளுக்கு மட்டும் வட மாகாணசபை முன்னுரிமை அளித்து செயற்படுவது அதிருப்தி அளிப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இது தொடர்பில் வட மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிங்க கொடி, பௌத்த கொடி என்பன பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், சுதந்திர தினமன்று பௌத்த மத வழிபாடுகள் மட்டும் நடாத்தப்பட உள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அனுராதபுரத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பௌத்த பிக்குகள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த குறைபாடுகளை களைந்து யாழ்ப்பாணத்தின் ஏனைய மதங்களுக்கும் முன்னுரிமை அளித்து தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டுமென தமிழ் அரசியல் கட்சிகள் கோரியுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி