1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அந்த பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை – மடுல்சீமையில் இன்று (9) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதாக முன்னதாக அறிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சுகயீனம் காரணமாக அதில் பங்கேற்க முடியாது என பின்னர் அறியப்படுத்தி இருந்ததாக வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

எனினும், குறித்த சந்தர்ப்பத்தில், வெலிமடையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், சஜித் பிரேமதாஸ பங்கேற்றுள்ளார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் வருகைக்காக காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

எனவே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் இந்த செயற்பாடு தொடர்பில், அதிருப்தி ஏற்பட்டுள்ளமையால், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச் செயலாளர் மற்றும் பசறை தொகுதியின் பிரதம அமைப்பாளர் ஆகிய பதவிகளில் இருந்து விலகுவதாக வடிவேல் சுரேஸ் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி