1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளில் பாகிஸ்தானின்

பங்களிப்பு தொடர்பாக இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியும், பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மூத்த பட்டதாரியுமான ஓய்வுபெற்ற அட்மிரல் ஜெயந்த் பெரேரா நினைவுபடுத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் குவெட்டாவின் கட்டளை, பணியாளர்கள் கல்லூரியில் பயின்ற இலங்கை பட்டதாரிகளுக்கிடையே மற்றுமொரு ஒன்றுகூடல் மற்றும் இராப்போசன விருந்துபசார நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இறுதிகட்ட யுத்தத்தின் பாக்கிஸ்தானிக் பங்களிப்பு தொடர்பாக நினைவு படுத்தியிருந்தார்.

முன்னாள் மாணவர்களுக்கு கூட்டுத்தலைவர்கள் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை வழங்கியமைக்கு நன்றியையும் அட்மிரல் ஜெயந்த் பெரேரா தெரிவித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் பங்களிப்பு குறித்து கருத்துரைத்த அவர்,

எப்போதும் இருநாடுகளும் வலுவான உறவைப் பேணிவருவதாகக் குறிப்பிட்டார்.

இராணுவ மற்றும் இராஜதந்திர வழிகள் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில், பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை ஒருபோதும் மறக்கமுடியாது என்றும் குறிப்பிட்ட அவர் பழைய மாணவர் சங்கங்களின் அவசியத்தையும் எடுத்துரைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி